மயிலாடுதுறை அருகே ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு கிராமத்தில் காவிரி வடகரை பகுதியில் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் செய்ய அப்பகுதி முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து கூடிபேசிய பொதுமக்கள் திருப்பணிக்கான பணிகளை பலரது பங்களிப்புகளுடன் தொடங்கினர்.


Kanchi Kamakshi Temple: மாசி பிரம்மோற்சவம் கொடியேற்றம்..இனி காஞ்சி மக்களுக்கு கொண்டாட்டம் தான்..!




பின்னர் கட்டிடங்களை சீர் செய்தல், புதிய சிலைகள் வடித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், இன்று மகா கும்பாபிஷேகமானது தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 13 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு ஹோமங்கள் துவங்கிய நிலையில் நான்கு காலயாக சாலை பூஜைகள் நடைபெற்று இன்று நிறைவுபெற்றது.


Thiruporur Temple: களைகட்டிய திருப்போரூர்..! கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா..!




முன்னதாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி மேளதாள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயில் கோபுரத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Maha Shivaratri 2024: நன்மைகள் தரும் மகாசிவராத்திரி! எப்படி வழிபட வேண்டும்?