Maha Shivaratri 2024: அனைத்திற்கும் ஆதியாக போற்றப்படும் சிவபெருமானுக்கு பல நாட்கள் உகந்த நாட்களாக உள்ளது. அதில் மிக மிக முக்கியமான நாளாக கருதப்படுவது மகா சிவராத்திரி. மகா சிவராத்திரியன்று சிவ பெருமானை வணங்கினால் தீமைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.


மகா சிவராத்திரி என்றால் என்ன?


ஒவ்வொரு மாதமும் சதுர்த்தசி திதியில் வரும் தேய்பிறை மாத சிவராத்திரி எனப்படும். சிவபெருமானுக்கு மிக உகந்த மாதங்களில் மாசி மாதமும் ஒன்றாகும். மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியில் வரும் தேய்ப்பிறையே மகா சிவராத்திர என்று கொண்டாப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி மிக மிக முக்கியமான நாளாக சிவாலயங்களிலும், சிவ பக்தர்களாலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் சிவாலயங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வது வழக்கம்.


மகா சிவராத்திரி எப்போது? | Maha Shivaratri 2024 Date 


நடப்பாண்டிற்கான மகா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மார்ச் மாதம்  இரவு 8.20 மணிக்கு தொடங்கி மார்ச் மாதம் 9ம் தேதி மாலை 6 மணி வரை சதுர்த்தசி திதி உள்ளது. இதனால், மார்ச் 8ம் தேதியே மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது.


மகா சிவராத்திரியன்று மார்ச் 8ம் தேதி இரவு 8.30 மணிக்கு பிறகே சிவராத்திரி பூஜையை தொடங்க வேண்டும். இந்த மாசி மாதமானது சூரிய பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யும் மாதம் ஆகும். இந்த மகா சிவராத்திரியன்று சிவ பெருமானக்கு முதல் நாள் தொடங்கி நான்கு கால யாகபூஜைகள் செய்ய வேண்டும்.


என்ன சிறப்பு?


சந்திரனை அடிப்படையாக கொண்ட நாட்காட்டியில் வரும் மாசி மாதம் மகா மாதம் என்று கூறப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் இந்த மகா சிவராத்திரியில்தான் பார்வதி தேவி உலக நன்மைகளுக்காக சிவபெருமானை பூஜித்து பல வரங்களை பெற்றார் என்றும் புராணங்கள் கூறுகிறது.


மகா சிவராத்திரியாக கொண்டாடப்படம் தேய்ப்பிறை சதுர்த்தசி திதிக்கு மகாநிதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. அமாவாசை பிறப்பதற்கு வரும் முதல்நாள் இரவான 11.36 மணி முதல் இரவு 12.24 மணி வரையிலான காலகட்டத்தை இவ்வாறு மகாநிதி என்று குறிப்பிடுவார்கள். அந்த நேரத்தில் சிவ பூஜை செய்வது மிக மிக உயர்ந்தது என்றும், அந்த நேரத்தில் பூஜை செய்து சிவபெருமானை வணங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம் ஆகும். தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட உள்ளது.


மேலும் படிக்க: இன்று சாம்பல் புதன்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி


மேலும் படிக்க: Kandadevi Temple: 17 ஆண்டுக்கு பின் அமைதியான முறையில் நடந்த கண்டதேவி தேர் வெள்ளோட்டம்; பரவசமடைந்த பக்தர்கள்