தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்த ஆவணி மாத கார்த்திகை வழிபாடு

வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத கார்த்திகை வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Continues below advertisement

பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத கார்த்திகை வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Continues below advertisement

தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

மாணவர்கள் உண்மையாக உழைத்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம் - நடிகர் தம்பி ராமையா பேச்சு


நோய் போக்கும் ஐதீகம்

மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்று முத்துக்குமாரசாமிக்கு கீர்த்திகை வழிபாடு நடைபெறும். குறிப்பாக  வைகாசி மாதம் நடைபெறும் கார்த்திகை வழிபாடு, மண்டலாபிஷேக கார்த்திகை என்று அழைக்கப்படுகிறது. 

Watch Video: "சாதி, மத சான்றிதழ் கேட்டாங்க" மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன? வீடியோ வெளியிட்ட நமீதா


ஆவணி மாதம் கார்த்திகை

இன்று ஆவணி மாதம் கார்த்திகையை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி கார்த்திகை மண்டபத்திற்கு வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளினார். அங்கு அவருக்கு பால், பன்னீர், இளநீர், திரவியம், மஞ்சள்,  சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி  குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை வழிபாட்டிற்காக மயிலாடுதுறை மாவட்டம் மட்டும் இன்றி  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

“மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க என்னிடம் மத சான்று கேட்டனர்” - நடிகை நமீதா வேதனை

Continues below advertisement
Sponsored Links by Taboola