புதுக்கோட்டை மாவட்டம், அருகே திருவரங்குளத்தில் இயங்கி வரும் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் 7ஆம் ஆண்டு கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் தம்பி ராமையா கலந்து கொண்டார்.


மேடையில் சிறப்புரை ஆற்றிய தம்பி ராமையா பேசியது..


நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரமிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் உரையாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவர் இந்த சமுதாயத்தில் வெற்றியடைய வேண்டும் என்றால் கல்வியை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். 


கல்வி ஒன்று மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை உயர்த்தும். ஆகையால் மாணவ, மாணவிகள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தடம் புரண்டு போகாமல், கல்வியில் வெற்றி பெற வேண்டும்,  என்ற நோக்கோடு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் கல்வியை முறையாக பின்பற்றி படிக்க வேண்டும்.


குறிப்பாக வேளாண் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் விவசாயம் சார்ந்த படிப்புகளை நன்கு தெரிந்து கொண்டு வளரும் தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும்.


மேலும் இக்கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் உண்மையான உழைப்பால் கல்வியை கற்று நேர்மையாக செயல்பட்டால் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடையலாம்.


குறிப்பாக வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் முதியவர்களிடம் அன்பு செலுத்தும் மாணவர்களாக திகழவேண்டும். உங்களுடைய வெற்றி உங்கள் கையில் இருப்பதாக தெரிவித்தார். 




மேலும், இந்த நிகழ்ச்சியில்  கல்லூரியின் தலைவர் ரத்தினம் தலைமை நடைபெற்றது. நிகழ்வு நிர்வாக இயக்குனர் துரை முன்னிலை வகித்தார். மேலும் கல்லூரியின் இணை இயக்குனர் வெங்கடேஷ், முதல்வர் ரகுராம், பேராசிரியர் உளவியல் துறை தலைவர் ஆறுமுகம், வேளாண் பூச்சியியல் துறை தலைவர் இணை பேராசிரியர் வினோத்குமார், கல்லூரியின் செயலாளர் ராஜாராம், துணை முதல்வர் சாந்தி, கால்நடைத்துறை தலைவர் பேராசிரியர் முகமது, மண் மற்றும் வேளாண் இணை பேராசிரியர் செல்வ அன்பரசு ஆகியோரம் நிகழ்வில் பங்கேற்றனர். 


மேலும் சிறப்பாக பணியாற்றிய கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.