மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற தன்னிடம் இந்து மத சான்றிதழ் வேண்டுமென கோயில் அதிகாரி முத்துராமன் என்பவர் கேட்டதாக நமிதா சமூக வலைதள மூலம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில்
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
நடிகை நமீதா வேதனை
இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து ஏராளமான நபர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் விதித்துள்ளதால் உள்ளூர் மக்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்றால் பல்வேறு சிக்கலை தாண்டி செல்ல வேண்டும் என்ற மனநிலை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை நமீதா தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய வந்த போது சிக்கல்களை அனுபவித்ததாக வீடியோ மூலம் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகை நமீதா அமைச்சருக்கு கோரிக்கை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று நமீதா, தனது கணவருடன் சாமி தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவரை தடுத்து நிறுத்திய கோயில் அதிகாரி முத்துராமன் என்பவர் நமீதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறியதாகவும், தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும், கூறி நடிகை நமீதா தனது சமூக வலைதள பக்கத்தில், இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். குற்றம் சாட்டும் நபர் பொதுப்பணித்துறை சூப்பிரண்டு முத்துராமன் என சொல்லப்படுகிறது. எனினும் முழுமையான விசாரணை நடைபெற்ற பின்பே முழு தகவல் தெரியவரும் என கோயில் நிர்வாகிகள் சார்பில் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை நமீதாவிடம் கேள்வி எழுப்பிய நபர் முத்துராமனா அல்லது ருத்திரா என்பவரா என்று தெரியவில்லை. அதே போல் அவர் கோயில் நிர்வாகியா அல்லது பொதுப்பணித்துறை அதிகாரியா அல்லது வேறு எதுவும் தனி நபரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”கிரக, வாஸ்து தோஷங்கள் அனைத்தும் விலக ஒரே இடம்” தஞ்சை மூலை அனுமார் கோயிலுக்கு போங்க..! சிறப்புகள் இதுதான்!!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒசூர் நெடுஞ்சாலையில் நொறுங்கிய கார்.. பயங்கர விபத்து.. ஒருவர் பலி.. 10 பேர் படுகாயம்