சீர்காழி அடுத்த நடராஜன் பிள்ளை சாவடி ஸ்ரீ வெற்றி முனீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 


வெற்றி முனீஸ்வரன் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சீர்காழி நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நடராஜர் பிள்ளை சாவடியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி முனீஸ்வரர் சுவாமி திருக்கோயில். இக்கோயில் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைக்காக விரிவாக்க பணி நடைபெற்று வருவதை அடுத்து கோயில் அங்கிருந்து அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கோயில் பரம்பரை அறங்காவலர் பத்மநாராயணன் வெற்றி முனீஸ்வரர் கோயிலை சாலையோர மாற்று இடத்தில் பல்வேறு தரப்பினரின் உதவியுடன் புதிதாக கட்டி முடிக்கப்பட்டித்தார். அதற்கான மகா கும்பாபிஷேகம் விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.


MK Stalin On Cabinet Reshuffle : “அமைச்சரவையில் மாற்றமா?” முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்..!




குடமுழுக்கு விழா 


கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த 19-ஆம் தேதி யாகசாலைகள் பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் இன்று நிறைவுற்றது, அதனை அடுத்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரங்களை அடைந்தனர்.


Beautiful Wife - Astrology: அழகான மனைவி அமைய வேண்டுமா..! ஜோதிடம் கூறுவது என்ன?




புனிதநீர் ஊற்றல்


அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோயில் கலசத்தில் புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம், உற்சவமூர்த்தி கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் வெற்றி முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கையிலை ஸ்ரீலஸ்ரீ ராஜன் சுவாமிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நாகராஜ் சிவாச்சாரியார் சுவாமி தலைமையில் நடைபெற்றது.


Rohit Sharma: டி 20 உலகக் கோப்பை வெற்றிக் உதவியது அந்த மூன்று பேர் தான்.. ரோஹித் ஷர்மா ஓபன் டாக்