தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இருளப்பட்டி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காணியம்மன் ஆலயம் உள்ளது. 


 காணியம்மன் தோன்றிய வரலாறு 


இஸ்லாமிய ஏழை குடும்பத்தில் பிறந்தவர் காணியம்மன் இவர்களது தாய் தந்தை விறகு வெட்டி அங்கேகாடுகளில் இருக்கும் கிழங்குகளை எடுத்து வந்து குழந்தைகளுக்கு உணவாக கொடுத்து வாழ்ந்து வந்தனர்.


உடல் முழுவதும் அம்மை போட்டு ஆபத்தான நிலையில் காணியம்மன்


இந்த நிலையில் காணியம்மனுக்கு உடல் முழுவதும் அம்மை போட்டு காப்பாற்றுவது கஷ்டம் என்று ஊர் மக்கள் அனைவரும் இந்த குழந்தையை காட்டிலே விட்டு விடுங்கள் என்று காணி அம்மனின் தாய் தந்தையிடம் கூறியதால் செய்வதறியாது பயந்து போய் காணியம்மனின் தாய் தந்தை அந்த குழந்தையை காட்டிலேயே விட்டுவிட்டு குழந்தைக்கு தேவையான கிழங்குகளை உண்ணுவதற்கு கொடுத்துவிட்டு மூன்று நாள் கழித்து வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தாய் தந்தை மன வருத்தத்துடன் வீட்டிற்கு சென்று விட்டனர்.


சக்தி உள்ள தெய்வமாக மாறிய காணியம்மன்


அப்பொழுது உடல் முழுவதும் அம்மை போட்டு இருந்த காணியம்மன் ஒரு சக்தி உள்ள தெய்வமாக அந்த இடத்தில் சுயம்புவாக இருந்திருக்கிறார். விட்டு வந்த குழந்தை என்ன ஆயிற்று என்று தாய் தந்தை சென்று பார்த்தபோது அங்கு சுயம்பு அம்மன் ஆக காணியம்மன் தோன்றியிருக்கிறார்.


தெய்வமாக வணங்கிய ஊர் மக்கள்


அதனால் அந்த ஊரில் உள்ள அனைவரும் சென்று பார்த்த போது சுயம்பு அம்மனாக காணியம்மன் ஊர் பொதுமக்களுக்கு காட்சி அளித்திருக்கிறார். இதனால் ஆச்சரியமடைந்த பொதுமக்கள் அன்றிலிருந்து காணியம்மனை தன்னுடைய குலதெய்வமாக வணங்கி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.




ஆவணி மாத வளர்பிறையில் தேர் திருவிழா


 ஆவணி மாத வளர்பிறை ஒரு வாரம் முழுவதும் இந்த காணியம்மனுக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த காணியம்மனுக்கு முதலில் இஸ்லாமிய சமூகத்தினர் சீர் கொண்டு வந்து தாலி சாற்றிய பிறகு தான் இந்துக்களின் முறைப்படி காணி அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும்.


இஸ்லாமியருக்கு முதலிடம்


 இந்துக்களின் கோயிலில் முதலில் இஸ்லாமியருக்கு தான்  பூஜை நடைபெறும். இன்றளவும் இந்த இருளப்பட்டி தேர் திருவிழாவில் இஸ்லாமியருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.


உப்பு நவதானியங்கள் வீசி வழிபாடு 



அந்த வகையில் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ காணியம்மன் தேர் வீதி உலா வெகுவிமர்சியாக நடைபெற்றது-ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்துகொட்டை, உப்பு, நவதானியங்களை வீசி வாழிபாடு.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த அ.பள்ளிப்பட்டி அருகே இந்து அறநிலை துறைக்கு சொந்தமான இருளப்பட்டி காணியாம்மன் தேர்திருவிழா விமர்சியாக நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆணி மாதம் முதல் வாரத்தில், அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிபட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி, காந்தி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுகூடி காணியம்மன் தேர் திருவிழா நடத்துவது வழக்கம்.


எம்பி ஆ.மணி முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வடம் பிடித்து இழுத்தார் 



 ஸ்ரீ காணியம்மன் தேர் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்ட பின் பொதுமக்கள் ஒன்று கூடி, தேர் வீதி உலாவினை,  தருமபுரி எம்.பி ஆ.மணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து, வடம்பிடித்து இழுத்து சென்றனர். 


இந்த திருவிழாவுக்கு அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து, தேர் வீதி உலாவின்போது தேர் மீது முத்துக்கொட்டை, உப்பு, பொறி, நவதானியங்களை வீசியெறிந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிபாடு செய்து விட்டு சென்றனர்.


கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன


இந்த தேர்திருவிழாவுக்கு பல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 


இந்த திருவிழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி அரசின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு பணியில் அரூர் டிஎஸ்பி ஜெகதீசன் தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 120 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 


மேலும் இருளப்பட்டி காணியம்மன் கோவில் சேலம்-வேலுர் பிரதான சாலையில் அமைந்துள்ளதால், கூட்ட நெறிச்சல் காரணமாக போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது.