தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யும் அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்த தகவலுக்கு பதிலளித்து உள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தொடங்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்துவிட்டு இதற்கான பதிலை முதல்வர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன ?
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல் வந்துள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “அப்படியான தகவல் ஏதும் எனக்கே வரவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இன்றைக்கு அமைச்சரவை மாற்ற அறிவிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார் என்றுதான் அவரது பேட்டியின் வாயிலாக புரிந்துக்கொள்ள வேண்டிய கருத்தாக இருக்கிறது.
இன்று இல்லையென்றால் என்று அமைச்சரவையில் மாற்றம் ?
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்னராகவே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அவர் வெளிநாடு செல்லும் நிலையில் துறை மாற்றம் வேண்டாம் என்ற ஆலோசனைகளும் பெறப்பட்டு அதுவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதனால், அமைச்சரையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது