மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் வேயுறுதோளியம்மை உடனுறை சோமநாதசுவாமி திருக்கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இறைவன் சுயம்புவாக அருள்பாலிக்கும் திருவாரூர், சிறுகுடி, திருக்கொண்டீச்சுரம், திருப்புன்கூர், கேதாரம், காளகஸ்தி, புதுச்சேரி, பந்தனைநல்லூர் உள்ளிட்ட சிவதலங்களின் வரிசையில் நீடூர் முக்கிய தலமாக விளங்குகிறது.




சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் முதல் யுகத்தில் இந்திரனும், இரண்டாம் யுகத்தில் சூரியனும், மூன்றாம் யுகத்தில் பத்தரகாளியும், நான்காம் யுகத்தில் நண்டும் பூசித்த சிறப்புக்குரிய தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிறப்புடையது இந்தலமாகும். தன் தொழிலில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அறுசுவை விருந்தளித்து வாழ்ந்த முனையடுவார் நாயனார் அவதரித்த இடமான இங்கு அவருக்கு கோயிலில் தனி சன்னதி உள்ளது. 


பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: அதிமுக கேள்விக்கு புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்




இக்கோயிலின் பழம் பெருமைகள் வடமலை நாரணக்குடை மன்னர் என்பவரால் இயற்றப்பட்ட திருநீடூர் தலபுராணம் என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது. இத்தகைய பல்வேறு  சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் விழா  தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி நீடூர் செங்கழுநீர் ஓடையில் இருந்து சிவனடியார் ஊர்வலத்துடன், யானை, குதிரை, ஒட்டகம் ஆகிய மங்கன சின்னங்கள் முன் செல்ல புனித தீர்த்தம் கடந்த 25ம் தேதி எடுத்து வரப்பட்டது முதல் கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது.


TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டங்களில் ? இன்றைய வானிலை நிலவரம்..




தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, யாக சாலையில் பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடங்கள், தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் மங்கள சின்னங்கள் முன்செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்க புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து சோமநாத சுவாமி மற்றும் வேயுறு தோளியம்மன் உள்ளிட்ட சுவாமி சந்ததிகளில் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.  இதில் உயர் நீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Movie Release This Week: தியேட்டர்களில் திருவிழாதான்..! இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்? வெல்லப்போவது யார்?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண