மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இன்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.


Pradeep Antony wishes to Kamal: ”தீர விசாரிப்பதே மெய்” - கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பிரதீப்




இந்தாண்டு துலா உற்சவத்நை முன்னிட்டு கடந்த ஐப்பசி 1-ம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும், பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிகரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் இன்று திருக்கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. மாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருக்கொடியேற்றம் நடைபெற்றது. திருக்கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.


North Facing House Vastu: வடக்கு பார்த்த வீடு: வாஸ்துவும் - ஜாதகரின் வெற்றியும் !! தோல்வியும் !!!




தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பஞ்ச மூர்த்திகளுக்கான கொடிகள் ஏற்றப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள பத்துநாள் உற்சவத்தில், வருகின்ற 11 -ம் தேதி மாலை மயிலம்மன்  பூஜையும், வருகின்ற  13-ம் தேதி மதியம் அம்மாவாசை தீர்த்தவாரியும், இரவு திருக்கல்யாணமும்  15-ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற்று 16-ம் தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும், கார்த்திகை 1-ம் தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது.  கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு வருகிறது 16 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ICC Player Of The Month: அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் யார்..? பெயரை பரிந்துரை செய்த ஐசிசி..!