North Facing House Vastu in Tamil: வாழ்வில் ஒரு நபர் முன்னேற்றம் அடைவதற்கும்  கீழே சரிந்து விழுவதற்கும்  அவர் வாழும் வீடு எப்படி காரணமாக அமைய முடியும் ? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்…


வாஸ்துவும், வீடும்:


என்னுடைய அனுபவத்தில்  ஜாதகருக்கு கெட்ட நேரம் வரும்போது   வீட்டை இடித்து கட்டுவது  பொருட்களை மாற்றி வைப்பது,  வாசலை இடித்து வேறு பக்கம் வைப்பது,  வீட்டிற்கு முன் மணல் கொட்டி வைப்பது,  சாக்கடை தண்ணீர் தேங்கும்படி செய்வது, பாழடைந்த வீடு போல காட்சி அளித்தாலும் அதை புதுப்பிக்காமல் அப்படியே விடுவது,  வீட்டை காற்றோட்டம் இல்லாமல் பொருட்களை வைத்து அடைத்து வைப்பது  இப்படி வீட்டிற்கு வாஸ்து தோஷத்தை உருவாக்குவதன் மூலம் அந்த  வீட்டில் வாழும் ஜாதகருக்கு கெட்ட நேரத்தை கொண்டு வர வைக்க முடியும். 


தாயின் கர்ப்பத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது.  அதை ஜாதக கட்டத்தில் 4  பாவம் ஆக வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.  அதே நான்காம் பாவம் தான் நாம் வாழும் வீட்டையும் குறிக்கிறது.  தாயின் கர்ப்பப்பையும்  நான்காம் பாவத்தில் வைத்த நம் முன்னோர்கள்  ஜாதகரின் வாழ்க்கையில் நன்மையும் தீமையும் அவர் வாழும் இல்லத்தின்  வாஸ்துவையும் வைத்து  தீர்மானிக்கப்படுவதாக கூறுகின்றனர்.


காற்றோட்டம் முக்கியம்:


 உதாரணமாக  ஒருவர் ஜாதகத்தில் நான்காம் பாவத்தில் குரு இருந்தால்,   அவர் விஸ்தாலமான  அறைகளைத் தான் தன்னுடைய வீட்டில் கட்ட வேண்டும்.  குறுகலான,  குறுகிய சிறிய அறைகளை கட்டக்கூடாது .  ஜாதகர் வசிக்கும் வீட்டில் காற்றோட்டம் நிறைந்திருக்க வேண்டும்.  அப்படி இல்லாமல் ஜாதகர் சிறிய வீட்டில் காற்றோட்ட வசதி இல்லாமல் வாழ்ந்தால்,  அவர் வாஸ்து தோஷத்தில் சிக்கி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  இப்படி வாஸ்துவை வைத்து, அவருடைய ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களையும் வைத்து அவர் நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்கிறாரா அல்லது தோஷங்களை  ஏற்படுத்தி வீழ்ச்சி அடைகிறாரா என்பதை நம்மால் அறிய முடியும். 


வடக்கு பார்த்த  வீட்டின்  அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?


வீட்டுக்குள் பல அறைகளில் பல வாசல்கள் இருந்தாலும்,  பிரதான தலைவாசல் வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.  வடகிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் ஹால் இருக்கலாம்.  தென்மேற்கு பகுதியில் படுக்கையறை. தண்ணீர் தொட்டியை மேற்கு திசையில் அமைக்கலாம். வடக்கு பார்த்த திசையில்  வீட்டின் மேற்கு பக்கம் குளியலறையை  அமைக்கலாம் .  அதேபோல்  தென்கிழக்கு பகுதியில்  சமையலறை அமைக்கலாம்.  வீட்டில் மையப்பகுதியில்  ஹால் இருந்து அதில்  சோபா சேர்  தென்கிழக்கு பகுதியை  ஒட்டி இருத்தல் நல்லது.


வடக்கு பார்த்த  வீடு,  எந்த தொழில் செய்பவர்களுக்கு நல்லது ?


வடக்கு பகுதி புதன் கிரகத்திற்குரியது,  ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள வேண்டுமானால் அதற்கு புதன் கிரகமே காரணம்.  நம் நாட்டில்  எல்லோரும் ஒரு வகையில் எதையாவது தயாரித்து அதை மற்றவர்களுக்கு விற்று  பணம் சம்பாதிக்கிறோம். கிட்டத்தட்ட அனைவருமே  வியாபாரிகளாகத்தான் இருக்கிறோம் .  நாம் செய்யும் தொழில் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. 


புதன் ஒரு வியாபார கிரகம். பேச்சாளர், எழுத்தாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர்,  சிரிப்புக்கு சொந்தக்காரர்,  தகவல் தொடர்பு,  செல்போன்,  கணினி,  வித்தைக்காரன்  இப்படி புதன் கிரகத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.  வடக்கு பார்த்த வீடு புதனின் ஆதிக்கம் நிறைந்ததால் மேலே சொன்ன அனைவருக்கும் இந்த வீடு பொருந்தக் கூடியதாக அமையும்.  குபேரன் இருக்கும் திசை வடக்கு, செல்வம் இருக்கும் திசை வடக்கு,  சௌகரியங்கள் சம்பாத்தியம் இருக்கும் திசை வடக்கு,  அப்படியான வடக்கு பார்த்த வீடு அனைவருக்குமே  பொருந்தக் கூடியதாக இருக்கும்,  ஆனால் அதிலும் சில வாஸ்து தோஷங்கள் உள்ளன. அப்படி தோஷம் உள்ள வீடுகளில் குடியிருப்போர் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும்.


வடக்கு பார்த்த வீட்டில், எந்த அறை, எங்கு இருக்க வேண்டும் ?


ஹால் -  வடகிழக்கு வடமேற்கு 


சோபா மேஜை  நாற்காலி  - தென்மேற்கு 


படுக்கை அறை - தென்மேற்கு 


பூஜை அறை  - வடகிழக்கு 


தண்ணீர் தொட்டி -  மேற்கு திசை 


சமையலறை -  வட மேற்கு 


வடக்கு பார்த்த வீட்டில் செய்யக்கூடாதவை  எவை ?


வடகிழக்கு பகுதியில் குப்பை தொட்டி,  தேவையற்ற பொருட்கள்  போடுவதை தவிர்க்க வேண்டும் 


மரங்கள் வடக்கு திசையில் நடக்கூடாது 


கழிப்பறை வடகிழக்கில் இருக்கக் கூடாது 


படுக்கையறை  வடகிழக்கில் இருக்கக் கூடாது 


செடி,  பூத்தொட்டி  போன்றவை வடமேற்கு திசையில் இருக்கக் கூடாது 


வடக்கு பார்த்த வீட்டில்  கோடீஸ்வரர் யார் ?


வடக்கு பார்த்த வீட்டில் குடியிருப்பவர்கள் எப்பொழுதும்  இனிமையான மனதுடன் தெளிந்த சிந்தனையுடன் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது சாஸ்திரம்.  அழுகையோ  அமர்க்களமும் வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் ,  கெட்ட நிகழ்வுகள் வீட்டில் நடக்கும் என்று கூறுகின்றன.  வடக்கு பார்த்த வீட்டில் துளசி மாடம் வைத்தால் நீங்கள் கோடீஸ்வரர்.  வடக்கு பார்த்த வீட்டில்  பூஜை அறையில் மகாலட்சுமியின் படம் வைத்தால் நீங்கள் கோடீஸ்வரர்.  வடக்கு பார்த்த வீட்டில்  மாமரம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர். இப்படி லட்சுமி கடாக்ஷம் பொருந்திய வடக்கு பார்த்த வீட்டில் மகாலட்சுமி  குடியிருப்பார்.


வடக்கு பார்த்த வீட்டிற்கு எந்த நிறம் பொருந்தும்? 


நீளம்,  பச்சை,   ஆரஞ்சு,   வெள்ளை  போன்ற நிறங்களை  வீட்டின் வண்ணங்களாக பயன்படுத்தலாம்.  நிறங்கள் ஒரு வீட்டிற்கு சுபிட்சத்தை கொண்டு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  சிகப்பு நிறத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.   குறிப்பாக குளியல் அறையில் சிகப்பு நிற பொருட்களை தவிர்க்க வேண்டும் .  பச்சை பிரதானமாக பயன்படுத்தலாம். அவை வீட்டிற்கு சுபிட்சத்தையும் பணத்தையும்  கொண்டு வரும்.  


லேசான மஞ்சள்,  கிளி பச்சை,  நீளம்  போன்றவை  வீட்டின் உள்ளே இருக்கும் அறைகளுக்கு வண்ணமாக பயன்படுத்தலாம் . வடக்கு பார்த்த வீட்டில் குழந்தைகளை அடித்து துன்புறுத்தக் கூடாது,  ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு  டியூஷன் நடத்தலாம்.  அவை தோஷங்களை நீக்கும்.  உத்திர தோஷம் இருப்பவர்களுக்கு வடக்கு பார்த்த வீடு நல்லது.  வடக்கு பார்த்த வீடு புத்திர தோஷத்தை நிவர்த்தி ஆகும்.  வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுபவர்கள் வடக்கு பார்த்த வீட்டை தேர்ந்தெடுப்பார்கள்.  அவர்களின் வளர்ச்சி பொறுமையாகவும் நிதானமாகவும்  இலக்கை எளிதில் அடையக் கூடியதாகவும் இருக்கும் .



ALSO READ | South Facing House Vastu: தெற்கு பார்த்த வாசல் வீடு:  வாஸ்துவும் - ஜாதகரின் வெற்றியும் !!! தோல்வியும் !!