Pradeep Antony wishes to Kamal: உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிரதீப் ஆண்டனி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். 


கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் சிறிய பிக்பாஸ் மற்றும் பிக்பாஸ் வீடு என இரு வீடுகள் இருந்தன. போட்டியாளர்கள் இரு வீட்டிற்கும் பிரித்து வைக்கப்பட்டதால் சர்ச்சைகளுக்கும், சண்டைகளும் அதிகமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பினர். பிரதீப் ஆண்டனியால் பெண் போட்டியாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதாக கமலிடம் முறையிட்டனர். இதனால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். 


பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமா பிரபலங்கள் யுகேந்திரன், அவரது மனைவி, கவின், ஆர்.ஜே. அர்ச்சனா என பலரும் கமல்ஹாசனின் முடிவு தவறு என கருத்து பதிவிட்டனர். பிரதீப்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு நடிகர் பிரதீப் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதீப் ஆண்டனி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “கமலின் மிகப்பெரிய ரசிகன், சத்யமா சொல்றேன். விஷ் யூ ஹாப்பியஸ்ட் 69 வது பர்த்டே. தமிழ் சினிமாவில் உங்களின் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் மிகப்பெரிய மரியாதை கொடுக்கிறேன். லவ் யூ..” என பதிவிட்டுள்ளார். 


இந்த பதிவுடன் சேர்த்து ”நல்லா இருங்க.. தீர விசாரிப்பதே மெய்” என்ற ஹேஷ்டேகுடன் சேர்த்து வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த ’இவர் எக்சிட் கொடுக்கிறாரா எனக்கு... யாராவது வேண்டும்னு செய்வாங்களா.. ஆனா நான் வேணும்னு செய்வேன்” என்ற காட்சி இடம்பெற்றுள்ள வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 






மேலும் படிக்க: "போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை"... ராஷ்மிகா விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி!


Ethirneechal : ரகசியமா பேசுறியா ஈஸ்வரி... சீண்டி பார்க்கும் குணசேகரன்... எதிர்நீச்சலில் காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!