குத்தாலம் அடுத்து செம்பியன் கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். 


செம்பியன் புனித அந்தோனியார் ஆலயம் 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செம்பியன் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான புனித அந்தோனியார் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டு தேர் பவனி திருவிழா கடந்த 13 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு பிராத்தனை வழிபாடுகள் நடைபெற்று வந்தது.


சாலையின் குறுக்கே எது இருந்தாலும் அப்படியே சாலையை போடும் ஊழியர்கள் - மயிலாடுதுறையில் தொடரும் அவலம்



கோலாகலமாக நடைபெற்ற செம்பியன் புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி திருவிழா


தேர் பவனி விழா


தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனிவ விழா நடைபெற்றது. முன்னதாக பங்குத்தந்தை ஜோ பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் உலக அமைதி மற்றும் மழை, மக்கள் துன்பம் இன்றி வாழ என பல்வேறு வேண்டுதல்களுடன் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.


TN TRB Assistant Professor: உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு திடீர் ஒத்திவைப்பு; ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு




வீடுகள் தோறும் வழிபாடு 


பின்னர் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் புனித அந்தோனியார் எழுந்தருளி தேர் பவனி நடைபெற்றது‌. ஆலயத்தில் இருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி சென்ற நிலையில், வீடுகள் தோறும் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் வழிபாடு மேற்கொண்டனர். 


Mahindra Thar Roxx: மஹிந்திரா தார் ராக்ஸ் Vs 3 டோர் எடிஷன் - புதிய காரின் அம்சங்கள், மாற்றங்கள் என்ன?