Thar Roxx Vs Thar 3 Door: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் மாடல், 3 டோர் எடிஷனிலிருந்து எவ்வளவு மாறுபாட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்திரா தார் ”ராக்ஸ்”
மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாகனம் 5 டோர் தார் எடிஷன். ஆரம்பத்தில் இதன் பெயர் அர்மாடா என தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கு ”ராக்ஸ்” என பெயர் சூட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று பிரீமியம் SUV செக்மெண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த கார், மஹிந்திராவின் பட்டியலில் Scorpio N-க்கு இணையாக புதிய 5 SUV அமர்ந்திருக்கும். Roxx மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5-டோர் எடிஷனாகும், ஆனால் இது வழக்கமான தார் 3 டோர் எடிஷனிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
தார் ராக்ஸ் எப்படி வேறுபடுகிறது?
முதன்மையாக இது 3-டோர் தார் எடிஷன் அடிப்படையிலானது அல்ல, மேலும் கூடுதல் கதவுகள் கொண்ட 3-டோர் தார் மாடலும் அல்ல. உண்மையில் இது நீண்ட வீல்பேஸ் மூலம், தாரை விட ஸ்கார்பியோ N உடன் நெருக்கமாக உள்ளது. சஸ்பென்ஷன் மற்றும் காம்பொனண்ட்ஸ்களும் ஸ்கார்பியோ N க்கு நெருக்கமாக இருக்கும். சஸ்பென்ஷன் வசதி கூட 3-டோர் தார் அல்ல. டிசைன் வாரியாக, தார் ரோக்ஸ் புதிய கிரில்லுடன் தார் 3-டோருக்கு எதிராக வித்தியாசமான ஃப்ரண்ட் - எண்ட் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
வடிவமைப்பில் வித்தியாசங்கள்:
தார் ராக்ஸ் 3-டோர் தார்க்கு எதிராக டூயல் ஸ்லாட் கிரில்லைக் பெற்றுள்ளது. ஹெட்லேம்ப் செட்-அப் எல்இடி விளக்குகளுடன் 3-டோர் தாருக்கு எதிராக புதியதாக உள்ளது. பக்க விவரங்களும் தார் ரோக்ஸில் மிகப் பெரிய டைமண்ட் கட் அலாய்களை பெற்றுள்ளது. அதுவே 3-டோர் தார் மாடலில் து எளிமையான வடிவமைப்பையே கொண்டு வருகிறது. Roxx மிக நீளமானது மற்றும் பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு அதிக இடவசதியுடன் நீண்ட வீல்பேஸ் மற்றும் அதிக லக்கேஜ் இடத்தையும் வழங்குகிறது.
உட்புற விவரங்கள்:
உட்புறத்தைப் பற்றி பேசும்போது, Roxx இன் அடிப்படை வடிவமைப்பு 3-டோர் தார் உடன் பகிரப்படவில்லை. ஏனெனில் Roxx ஆனது டிஜிட்டல் க்ளஸ்டர் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய இரட்டை 10.25-இன்ச் திரைகளைப் பெறுகிறது. பவர் டிரைவர்ஸ் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, ADAS, சன்ரூஃப் மற்றும் பலவற்றை எதிர்பார்க்கலாம். இந்த வசதிகள் 3-டோர் தாரில் இருந்ததில்லை.
இன்ஜின் விவரங்கள்:
3 டோர் எடிஷனிலிருந்து தார் ராக்ஸ் மாடலுக்கு ஒரு விஷயம் பகிரப்படுகிறது என்றால் அது இன்ஜின் லைன் - அப்கள் தான். காரணம் முந்தைய மாடலில் உள்ள அதே, 1.5லி டீசல் RWD, 2.0லி டர்போ பெட்ரோல், 2.2லி டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள கொண்டுள்ளது. பெட்ரோல் 2.0 மற்றும் 2.2லி 4x4 இன்ஜின் ஆப்ஷன் 6-ஸ்பீடு ஆட்டோ அல்லது 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கும். நிச்சயமாக, தார் ராக்ஸ் 3-டோர் எடிஷனை விட மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI