600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமச்சந்திர சுவாமி கும்பாபிஷேகம் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமச்சந்திர சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Continues below advertisement

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமச்சந்திர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பொரும்பூர் ஊராட்சியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சீதா ராம லெட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமச்சந்திர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயிலை கிராம மக்கள் புனரமைப்பு பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்தனர்.

Tamilisai in BJP: கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்- மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை


புனரமைப்பு திருப்பணிகள்

அதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் கோயில் புனரமைப்பு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றது. சிலைகள் புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. அதனை அடுத்து மகா கும்பாபிஷேகத்திற்கான நாள் குறித்து, அதற்கான வேலைகள் நடைற்றன. அதனைத் தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Murasoli Profile : ’6 முறை எம்.பி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு கல்தா’ தஞ்சையில் புதிதாக போட்டியிடும் திமுகவின் முரசொலி, யார் இவர்..?


யாகசாலை பூஜையை தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேகம்

முன்னதாக கடந்த 18-ம்  தேதி சிறப்பு ஹோமங்களுடன் முதல்கால யாகசாலை பூஜையானது துவங்கியது. பின்னர் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நான்கு கால யாகசாலை பூஜை இன்று காலை நிறைவேற்று பூர்ணாகுதி நடைபெற்றது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க, வேத விற்பன்னர்கள் தலையில் சுமந்து  ஊர்வலமாக கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்தது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

DMK Candidates: தி.மு.க. வேட்பாளர்களில் இத்தனை பேர் வாரிசுகளா? பட்டியலை நீங்களே பாருங்க!

Continues below advertisement
Sponsored Links by Taboola