மக்களவை தேர்தலுக்கான திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பெரும்பாலும் வாரிசு வேட்பாளர்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


திமுக தொகுதி பங்கீடு: 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 19 தொகுதிகள் போக, மீதமுள்ள 21 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. 


திமுக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்: 



  1. தூத்துக்குடி- கனிமொழி

  2.  தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்

  3. வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி

  4. தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

  5. மத்தியசென்னை- தயாநிதி மாறன்

  6. ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு

  7. காஞ்சீபுரம் - ஜி.செல்வம்

  8. அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்

  9. திருவண்ணாமலை- அண்ணாதுரை

  10. தர்மபுரி- ஆ.மணி

  11. ஆரணி-தரணிவேந்தன்

  12. வேலூர்- கதிர் ஆனந்த்

  13. கள்ளக்குறிச்சி- மலையரசன்

  14. சேலம்-செல்வகணபதி

  15. கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்

  16. பெரம்பலூர் - அருண் நேரு

  17. நீலகிரி - ஆ.ராசா

  18. பொள்ளாச்சி-  ஈஸ்வரசாமி

  19. தஞ்சாவூர் - முரசொலி

  20. ஈரோடு-பிரகாஷ்

  21. தேனி- தங்க தமிழ்செல்வன்


வாரிசு வேட்பாளர்கள்:


இந்தநிலையில், திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வாரிசு வேட்பாளர்கள் யார்? யார்? என்பதை இங்கே பார்க்கலாம். 



  • தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி (முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கை ஆவார்.)

  • தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகளும், தற்போதைய தமிழ்நாட்டின் நிதியமைச்சரான  தங்கம் தென்னரசின் அக்காவும் ஆவார்.)

  • மத்திய சென்னை - தயாநிதி மாறன் (முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் ஆவார்)

  • வடசென்னை - டாக்டர்.கலாநிதி வீராசாமி (முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆற்காடு வீராசாமியின் மகனாவார்).

  • வேலூர் - கதிர் ஆனந்த் ( தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் பொருளாளருமான துரைமுருகனின் மகன் ஆவார்)

  • பெரம்பலூர் - அருண் நேரு (திமுக முதன்மைச் செயலாளரும், உள்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் ஆவார்)

  • தென்காசி - டாக்டர் ராணி ஸ்ரீ குமார் (இவர் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். ராணி ஸ்ரீ குமாரின் தாத்தா பி.துரைராஜ். இவர் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

  • தருமபுரி - ஆ. மணி (இவரது தந்தை K. ஆரிமுத்துக்கவுண்டர் இவர் பேரறிஞர் அண்ணாவால் கையொப்பமிட்டு உறுப்பினர் ஆனவர்.) 


தற்போதையை மக்களவை உறுப்பினர்கள் யார்? யார்? திமுக வேட்பாளர்கள்: 


கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தற்போது திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர்.