மயிலாடுதுறை அருகே அகத்தியர் மற்றும் மார்க்கண்டேயர் வழிபட்ட பிரசித்தி பெற்ற கொழையூர் அகஸ்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 


கொழையூர் அகஸ்தீஸ்வரர் கோயில்


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கூழையூர் எனப்படும் கொழையூர் கிராமம் உள்ளது. உருவத்தில் குள்ளமான அகத்திய முனிவர் தனது பாவங்களை போக்கிக் கொள்ள வழிபட்ட தலம் என்பதால் இவ்வூர் கூழையூர் என்றும், இத்தலத்து இறைவன் அகஸ்தீஸ்வரர் என்றும் பெயருடனும் அழைக்கப்படுகிறது. மேலும், இந்த தலம் மார்க்கண்டேயரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்கு உரியதும், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமும் ஆகும்.


Balaji Murugadoss: நசுக்கிட்டாங்கனு சொல்லி சொல்லியே வாரிசுகளை வைத்து படமெடுக்கிறார்கள்.. பிக்பாஸ் புகழ் பாலா




திருப்பணிகள் 


இதுபோன்ற மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகம் முடிவெடுத்து, அதற்கான திருப்பணிகளை தொடங்கி செய்து வந்தனர். கோயிலை புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான நாள் குறித்து ஆகஸ்ட் 19 -ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 


10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 65 லட்சம் மாணவர்கள் ஃபெயில்; அரசே சொன்ன அதிர்ச்சித் தகவல்!




யாகசாலை பூஜைகள் 


அதனை அடுத்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று காலை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்றதை அடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


MK Stalin On Cabinet Reshuffle : “அமைச்சரவையில் மாற்றமா?” முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்..!