பிக்பாஸ் புகழ் பாலா
பிக் பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துகொண்ட காலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருபவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். சமீபத்தில் ஜே.எஸ்.கே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சதீஷ் குமார் தயாரிப்பில் 'ஃபயர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில், ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சிங்கம் புலி, சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். சதீஷ் ஜி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள டி.கே இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியில் பாலாஜி முருகதாஸ் ஒரு ப்ளே பாயாக வலம் வருவது போல் காட்சியமைக்கப்பட்டு வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்றது. இப்படத்தில் நடித்ததற்காக தனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக கொடுக்கப்படவில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை கெட்ட வார்த்தையில் திட்டியிருந்தார். அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அவரது மற்றொரு பதிவு சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நசுக்கப்பட்டோம் என்று சொல்லி வாரிசுகளை வைத்து படமெடுக்கிறார்கள்
தனது எக்ஸ் பக்கத்தில் பாலா வெளியிட்ட பதிவில் “ ஒதுக்கப்பட்டவர்கள் , நசுக்கப்பட்டவர்களின் படங்களை வாரிசு நடிகர்களை வைத்து படமெடுப்பெடுப்பது தான் வேடிக்கையான விஷயம்” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பின் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து அவர் நீக்கினார். தனது பதிவை செய்தியாக வெளியிட்ட செய்தியை மீண்டும் பகிர்ந்து. தான் பதிவிட்ட கருத்தை தன்னை நீக்க வலியுறுத்தியதாகவும் இல்லையென்றால் தனது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்றும் ஆனால் தான் சொன்ன கருத்தை தான் நம்புவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Vaazhai Movie Review: இது வேற மாறி(ரி)! ரசிகர்களிடம் தழைத்ததா வாழை? முழு திரைவிமர்சனம் இதோ!