தேனி மாவட்டம் கம்பம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோவில் பாலாலயம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள்  நடைபெற்று வந்தது.


AR Rahman: இசை புயல் இயக்கிய முதல் படம்... சர்வதேச சினிமாவில் புதிய மைல்கல் பதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!


அதனைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதையடுத்து அடுத்த நாள் மகாலட்சுமி ஹோமம், தன பூஜை நடைபெற்ற முதல் கால யாக வேள்வி பூஜைகள் துவங்கப்பட்டது. கனி மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், தொடர்ந்து நேற்றைய தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக கேள்வி பூஜைகள் நடைபெற்றது .


TVK Vijay: வெளியானது தவெக உறுதி மொழி: முன் மொழிந்த விஜய் - வழி மொழிந்த தொண்டர்கள்


தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக வேள்வி நிகழ்ச்சி துவங்கப்பட்டு கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின்பாக கடம்  புறப்பாடு நடைபெற்று அருள்மிகு ஸ்ரீ சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், பைரவர், நவகிரகம், உள்ளிட்டவைகளுக்கு அரோகரா கோஷங்கள் முழங்க மகா கும்பாபிஷேகமானது மிக விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மூலவர் கலசங்கள் மற்றும் பரிவார கலசங்கள் அனைத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


”வீட்டில் செல்வம் சேர, TNPSC -UPSC தேர்வுகளில் வெற்றிபெற” - ஜாதகம் கூறுவது என்ன?


அதன்பின் கும்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தண்ணீர் கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி தெளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சுருளிப்பட்டி, காமைய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.