நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர். நவகிரகங்களில் சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று அழைக்கப்படுபவை ராகுவும், கேதுவும் ஆகும். ராசிக்கட்டங்கள் 12- ல் மற்ற கிரகங்கள், நகரும் திசைக்கு எதிர் திசையில் இவை நகர்கின்றன.
ராகு - கேது பெயர்ச்சி:
ஜோதிட ரீதியாக ராகு யோகக்காரகன் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒன்றரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகு கேதுக்கள், ராசி மண்டலத்தில் நேர் எதிர் திசையில் சுற்றி வருகின்றன.
சிறப்பு வழிபாடு:
ஒரு ராசிக்கு 3,6,11 ஆகிய இடங்களில் ராகு, கேதுக்கள் இருந்தால் நன்மை செய்யும் என்பது ஜோதிட ரீதியான காரணமாகும். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களிலும் நவகிரக சன்னதிகளில் ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.
கோடங்குடி கோயில்:
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ராகு - கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி பழமையான பிரசித்தி பெற்ற கார்கோடகநாதர் சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில், முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால், இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது. மேலும் 1951 -ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமாகும்.
Leo Third Single: ‘லியோ’ படத்தின் ரொமான்டிக் பாடல்... நாளை வெளியாகும் மூன்றாவது சிங்கிள்?
இத்தகைய பல்வேறு சிறப்பு இவ்வாலயத்தில் இன்று ராகு கேது பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று மதியம் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும்,கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளதை முன்னிட்டு கார்கோடகநாதர் சுவாமி ஆலயத்தில் சிறப்பு ஹோமம் பூரணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து கார்கோடகநாதருக்கு சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.