ஐசிசி உலகக்கோப்பை தொடரின் 5 வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது.


இந்தியா - ஆஸ்திரேலியா:


இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டி இது என்பதால் வெற்றிக்கணக்குடன் தொடரை தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


இந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்துன் விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இச்சூழலில், 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றை செய்து நிகழ்த்தி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர். 


டக் அவுட்:


அதாவது தொடக்க ஆட்டக்காரர்கள் களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசன் இருவரும் டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல், 6 பந்துகள் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஜோஷ் ஹேசில்வுட் பந்து வீச்சில் எல்.பி.டபுள்யூ முறையில் ரன் ஏதும் இன்றி வெளியேறினார். அதேபோல், மூன்று பந்துகள் மட்டுமே நின்ற ஸ்ரேயஷ் அய்யரும் டக் அவுட் ஆகி நடையைக் கட்டினார்.






மோசமான சாதனை:


இதற்கு முன்னதாக  கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று ஒரு மோசமான சாதனையை இந்திய அணி வீரர்கள் செய்தனர். அதாவது, கடந்த 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுனில் கவாஸ்கர் - ஸ்ரீகாந்த் ஜோடி , ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்-அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்துச் சென்றனர். 1983ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவர் டக் அவுட்டாகியுள்ளனர். 


ரசிகர்கள் அதிர்ச்சி:


இது இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் பலரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர். இந்தியா வெற்றியுடன் இந்த தொடரை தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ரசிகர்களிடம் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


களத்தில் கோலி:


மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தற்போது பார்ட்னர்ஷிப் அமைத்துன் விளையாடு வருகின்றனர். அதில், விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி இலக்கை நோக்கி ஆடி வருகின்றனர். 


மேலும் படிக்க: ODI WC 2023: வந்துட்டான்ய்யா...வந்துட்டான்ய்யா...மைதானத்திற்குள் நுழைந்த ஆசாமி! விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன்!


 


மேலும் படிக்க: Rashid Khan: நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான்; சம்பளத்தை அள்ளிக்கொடுத்த ரஷீத்கான்!