ஜிகர்தண்டா


கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் “ஜிகர்தண்டா” . இந்தப் படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, அம்பிகா, சங்கிலி முருகன், கருணாகரன், விஜய் சேதுபதில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் வித்தியாசமான கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.  இதில் அசால்ட் சேது என்னும் கேரக்டரில்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. 


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற டைட்டிலில் இரண்டாவது பாகத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் முக்கியக் கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் இயக்குநராக சித்தார்த் நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தில் எஸ்.ஜே சூர்யாவும் ராகவா லாரன்ஸூம் முரட்டுத்தனமான கேங்க்ஸ்டர்களாக நடித்துள்ளார்.


மேலும் 1975ஆம் ஆண்டு இந்தப் படத்தின் கதை அமைந்திருப்பதாக சமீபத்தில் வெளியான டீசர் மூலம் தெரியவருகிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த பாகத்திற்கும் இசையமைத்துள்ளார்.


மாமதுர பாடல்






இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை மதியம் 12 மணியளவில் இந்தப் படத்தின் முதல் பாடலான மாமதுர பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட இருக்கிறார்.