லியோ ஃபீவர்!


கோலிவுட் வட்டாரத்தில் லியோ ஃபீவர் தொடங்கிவிட்டது. சமூக வலைதளங்களை ‘லியோ’ விஜய் முழுக்க முழுக்க ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முழுவீச்சில் படத்தின் ப்ரொமோஷன் பணிகளைத் தொடங்கியுள்ளார். லியோ படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 10 நாள்கள் சொச்சமே உள்ள நிலையில் ரசிகர்கள் கவுண்ட் டவுனைத் தொடங்கி வெளியீட்டு நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.


லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்தான நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை முழு வைபுக்கு தள்ளியுள்ளது. ட்ரெய்லரில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் என படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ட்ரெய்லர் வெளியாகி மூன்றே நாள்களில் 42 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று ட்ரெய்லர் சாதனை படைத்து வருகிறது. இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள அனிருத்தின் பின்னணி இசையும் கவனமீர்த்துள்ளது.


மூன்றாவது சிங்கிள்


இந்நிலையில் லியோ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அன்பு எனும் ஆயுதம்’ எனும் வரிகளுடன் இப்பாடல் தொடங்குவதாகவும் எனவும், மூன்றாவது சிங்கிள் பாடலான இப்பாடல் லியோ கதைக்கருவை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.


ஏற்கெனவே ‘நா ரெடி தான்’ ‘ Bad Ass' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சிங்கிள் பாடலான இப்பாடல் நாளை வெளியாக உள்ளதாக வந்துள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 ‘ஐ ஆம் ஸ்கேர்ட்’ பாடல்


முன்னதாக தனியார் சேனலுக்கு  லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் அவரிடம் மூன்றாவது பாடல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.


இந்நிலையில், “படத்தின் இன்னும் மூன்று பாடல்கள் வர வேண்டி உள்ளது. “எல்லாமே நல்லா இருக்கும். ‘ஐ ஆம் ஸ்கேர்ட்’ (I am Scared) அப்படினு ஒரு பாடல் இருக்கு அது எனக்கு இந்த ஆல்பம்ல ஃபேவரைட். அனி அதை ரிலீஸ் பண்றாரானு தெரியல. இல்ல இன்னொரு மெலடி பாடல் இருக்கு. அது ரிலீஸ் ஆகலாம்” எனப் பேசியிருந்தார்.


இந்நிலையில் “அது ஒரு ரொமாண்டிக் பாடலா எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, ஆமா. அது என் படமானு கேட்கற மாதிரி இருக்கும்” என கலகலப்பாக பதிலளித்திருந்தார். இந்நிலையில், லியோ படத்தின் அடுத்தடுத்த பாடல்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.


லியோ பட ரிலீஸ் நாளில் விடியற்காலை, மற்றும் நள்ளிரவு காட்சிகள் அனுமதிக்கப்படாத நிலையில், 19ஆம் தேதிக்கு முன்பாக 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு லியோ பிரீமியர் ஷோ இருக்கலாம் என கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வருகின்றன. லியோ திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


மேலும் படிக்க: The Road Review: த்ரிஷாவின் தி ரோடு சுவாரஸ்யம் கூட்டியதா? இல்லை ஸ்பீட் பிரேக்கரா? முழு விமர்சனம்!


Raththam Movie Review: விஜய் ஆண்டனியின் சைலண்ட் ட்ரீட்மென்ட்.. ரத்தம் படம் விமர்சனம் இதோ..!