கோலாகலமாக நடைபெற்ற பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர்.


கண்ணார தெரு காமாட்சி அம்மன் திருக்கோயில்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பெரிய கண்ணார தெரு முக்குட்டில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேக விழா செய்ய கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர்.


UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்



மயிலாடுதுறையில் மையத்தில் உள்ள கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா - எந்த கோயில் தெரியுமா?


கோயில் திருப்பணி 


அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் பங்களிப்புகளுடன் கோயிலின் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றன. கோயில் கட்டிடங்கள் புணரமைத்தல், சிலை வடித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு நல்நாள் குறித்து யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. கடந்த 27 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையும் அதனை அடுத்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது. 


"ஸ்லீவ்லெஸ் கூட போட மாட்டாங்களாம்...சாய் பல்லவியை புகழ்ந்த அர்ஜூன் ரெட்டி இயக்குநர்




புனிதநீர் புறப்பாடு 


தொடர்ந்து இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து. பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை அடுத்து யாகசாலையில் இருந்து பூதிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மல்லாரி இசையுடன் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தனர். 


STR 50 : 50 ஆவது படத்தில் தயாரிப்பாளராக களமிறங்கும் சிம்பு..கமலுடன் கருத்து வேறுபாடா ?




கலசத்தில் புனிதநீர் ஊற்றல்


தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத, கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் மயிலாடுதுறையின் நகர பகுதியில் அமைந்துள்ளதால் சுட்டு வட்டார பகுதிகளின் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பக்தி பரவசம் பொங்க தரிசனம் செய்து வழிப்பட்டனர்.


NIA Enquiry: தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர் மன்னார்குடியில் தஞ்சம்.? என்ஐஏ விசாரணையால் பரபரப்பு...