மயிலாடுதுறை அருகே கடலங்குடியில் உள்ள சிவாலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வழக்கமாக நடராஜர் சுவாமியை பெண்கள் மட்டும் பல்லக்கில் வினோத வழிபாடு நிகழ்வு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் உள்ளது.


Vendhaya Keerai Chutney : வெந்தய கீரையில் சுவையான சட்னி.. இட்லி, தோசைக்கு சூப்பரான சைட் டிஷ்..




இங்கு திருவாதிரையை முன்னிட்டு இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியம் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும், பெண்கள் உதவியால் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், இந்தக் கோயிலில் நடராஜரை பல்லக்கில் வைத்து தூக்கும் வைபவத்தை பெண்கள் மட்டுமே நடத்துவர். இக்கோயிலில் பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 


Tamil Movie Re-release: மீண்டும் ஹிட்டடிக்கும் ரீ ரிலீஸ் படங்கள்: புதுக்கதைக்கு பஞ்சமா? கொக்கரிக்கும் கோலிவுட் வட்டாரங்கள்!




இந்நிலையில் இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாட்டு செய்யப்பட்டது. பெண்கள் பல்லக்கில் தூக்கிக்கொண்டு கோயிலில் பிரகாரங்களில் சுற்றி ஊர்வலமாக வந்தனர் ‌. மேலும் ஏராளமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் மட்டுமே சுவாமி சிலையை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருவது இங்கு மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Governor RN Ravi: நள்ளிரவில் திடீரென பரவிய வாயு.. பொதுமக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம் - ஆளுநர் ரவி கவலை..!