கீரைகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இதனால் நாம் கீரைகளை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த வகையில் வெந்தய கீரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. தற்போது வெந்தய கீரையை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்றுதான் கத்துக்க போறோம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், கொத்தமல்லி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின்பு, வர மிளகாய், பூண்டு, புளி, உப்பு, கறி வேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கொள்ளவும்.
இதனுடன் வெந்தயக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் தேங்காயும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வெந்தய கீரை சட்னி தயார்.
வெந்தய கீரையின் நன்மைகள்
வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
மூல நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு வெந்தய கீரை மிக சிறந்த மருந்தாகும். மேலும் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும்.
வெந்தய கீரை, சொறி, சிரங்கை நீக்கும் என சொல்லப்படுகிறது.
மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை வெந்தயக்கீரை குணப்படுத்தும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Ennore Gas Leak: எண்ணூரில் வாயுக்கசிவு - கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு