மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்ட அகோரமூா்த்தியாக சிவபெருமான் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். 




மேலும், நவ கிரக ஸ்தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய  ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் இந்திர பெருவிழா 13 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்திர பெருவிழா நேற்று இரவு (மார்ச் -4)  கொடியேற்றத்துடன் துவங்கியது.  


Flu Fever: வைரஸ் காய்ச்சல்...”மார்ச் 10ஆம் தேதி 1,000 இடங்களில் சிறப்பு முகாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு




முன்னதாக, கொடிமரத்துக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் திரு கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்த சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா 12 -ஆம் தேதியும், தெப்பத்திருவிழா 15 -ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது.


Bus Driver Strike: சென்னையில் தனியார் பேருந்துக்கு அனுமதி அளித்ததை கண்டித்து அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண