திருச்சியில இருக்கிற உத்தமர் கோவில் பற்றி தான் நாம இன்னைக்கு பார்க்க போறோம். இந்த கோவில்ல எப்படி மும்மூர்த்திகள் வந்தாங்கன்னு யோசிக்கிறீங்களா?..


இந்து புராணத்தின்படி விஷ்ணு கடவுள் இங்க கடம்ப மரமாக தோன்றினார். அதனால இந்த ஊர் கதம்பனூர் அப்படின்னு பெயர் பெற்றது. இந்த கோவில்ல சிவபெருமான் பிஷாந்தர் வடிவில் அதாவது ஒரு துறவி வடிவில் இருப்பாரு. இந்த தளத்தில் விஷ்ணுவ வழிபட்டதன் மூலம் சிவபெருமான் குணமடைந்ததாக நம்பப்படுகிறது. அதனால இந்த கோவில் பிஷாந்தர் கோயில்னு அழைக்கப்படுகிறது. இதே போல விஷ்ணு ஒருமுறை பிரம்மா கடவுளின் பக்தியை சோதிக்க விரும்பினார். அப்போ பிரம்மா அவரை திருமஞ்சனத்தால் வழிபட்டார். அப்போ அந்த அபிஷேக நீர் பக்கத்துல இருந்த  ஒரு தொட்டியை நிரப்பியது. அந்த நீர் 'கதம்ப தீர்த்தம்' என்று அழைக்கப்பட்டது. பிரம்மாவின் பக்தியில திருப்தி அடைந்த விஷ்ணு பிரம்மாவுக்கு இத்தலத்துல சன்னதி இருக்கும்படி வரம் அளித்தார். இதனாலேயே இந்த இடத்துல மும்மூர்த்திகளும் இருக்காங்க.




இந்த கோவிலோட வரலாறு பற்றி பார்த்தாச்சு இப்ப இந்த கோவில் எங்க இருக்குன்னு பார்க்கலாம். தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில்தான் இந்த உத்தமர் கோயில் இருக்கு. இந்த கோவில் 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலை சுற்றி ஒரு கருங்கல் சுவர், கோவில்ல இருக்கிற எல்லா சன்னதிகளையும் சூழ்ந்து இருக்கு. இந்த கோவில்ல விஷ்ணு பகவான்- புருஷோத்தமன் அவதாரத்திலும், லட்சுமி தேவி- பூரணவள்ளி தாயார் அவதாரத்திலையும், சிவன்- பிஷாந்தார் வடிவிலையும், பார்வதி- சௌந்தர்யா பார்வதி வடிவிலையும், பிரம்மா மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட சுவாமிகள் இருக்காங்க. இவங்க சப்த குரு அல்லது ஏழு குருக்கள் என்று அழைக்கப்படுறாங்க.




மூன்று கடவுளும் ஒண்ணா இருக்கறதுனால எல்லா விஷேசங்களுமே இங்கு பொதுவாக கொண்டாடப்படுகிறது. அதுலயும் குறிப்பா செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிஷாந்தாருக்கும், புருஷோத்தமனுக்கும் அபிஷேகம் சிறப்பா நடக்கும் . அதே போல பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி போன்ற நாட்களில் கூட இங்கே விசேஷமா இருக்கும். கோவிலோட முக்கிய திருவிழாவா பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது. இங்க சரஸ்வதி தேவி இருக்கறதுனால குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் கூட நிறைய பேர் இங்கே பண்றாங்க. திருச்சி மட்டுமில்லாம, மாவட்டத்தை சுற்றி இருக்கிற பல பகுதியில் இருந்து கூட இங்க வந்து குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் செய்கிறார்கள்.




திருமங்கை ஆழ்வாரால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பத்து பாடல்களில் இந்தக் கோயில் போற்றப்படுது. இந்த கோவில் விஷ்ணு பகவானின் 108 திவ்யதேச கோவில்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் , இந்த கோவிலுக்கு வந்தாலே மன அமைதியும், மகிழ்ச்சியும் தரும் அளவிற்கு தளம் அமைந்துள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த உத்தமர் கோவிலை நாம ஒரு தடவை விசிட் அடிச்சோம்னா எல்லா கடவுளையும் ஒரே நேரத்துல பார்த்த திருப்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண