தமிழ்நாட்டில் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்த இறை நம்பிக்கை உடைய 200 பேரை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து 200 பேரை அழைத்துச் செல்ல உள்ளது. இதற்காக 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து  200 பேர்களின் விபரங்களை அனுப்புமாறு இணை ஆணையர்களுக்கு ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்திருத்தார்.




இந்த ஆன்மீக பயணமான காசி அழைத்துச் செல்லப்படுவோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் மற்றும் இறை நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், ஆன்மீக பயணம் மேற்கொள்வோர், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த பயணத்தின் போது விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளையும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.


Supreme Court : மனிதக்கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்..முடிவுக்கு கொண்டு வர என்னதான் செய்தீர்கள்?..மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி..!




இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 12 பக்தர்கள் ராமேஸ்வரம் முதல் காசி வரை புனித பயணத்தை இன்று தொடங்கியுள்ளனர். இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 12 பக்தர்கள் இந்த ஆன்மீகப் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் இருந்து இன்று காலை வேன் மூலம் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Ashwin Ravichandran : ஒரே மைதானத்தில் பல விக்கெட்கள்.. முதலிடத்தில் அஸ்வின்.. ஹோல்கர் மைதானத்தில் இப்படி ஒரு சாதனையா?




முன்னதாக, கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளவுள்ள பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஆன்மீகப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மார்ச் 2 -ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து காசிக்கு ரயில் மூலம் புனித பயணத்தை தொடங்கும் பக்தர்கள் மீண்டும் இம்மாதம் ஒன்பதாம் தேதி மயிலாடுதுறை வந்தடைய உள்ளனர்.


Kane Williamson Test Record : நியூசிலாந்தின் கேடயமாக கேன் வில்லியம்சன்.. ராஸ் டெய்லரின் சாதனையை முறியடித்து முதலிடம்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண