Ashwin Ravichandran : ஒரே மைதானத்தில் பல விக்கெட்கள்.. முதலிடத்தில் அஸ்வின்.. ஹோல்கர் மைதானத்தில் இப்படி ஒரு சாதனையா?

மூன்றாவது டெஸ்ட் நடைபெறும் ஹோல்கர் மைதானத்தில் அஸ்வின் அற்புதமான சாதனை ஒன்றை தனதாக்கி வைத்துள்ளார். அது என்ன என்பதை இங்கே பார்க்கலாம். 

Continues below advertisement

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒருநாளே உள்ள நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் இந்த டெஸ்டில் அதிக விக்கெட்களை எடுப்பார் என்று நம்பப்படுகிறது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் அதிர்ச்சியை கொடுக்க வழிவகுக்கும். 

Continues below advertisement

தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் இந்திய அணி ஒன்றில் வெற்றிபெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 

இந்தநிலையில், மூன்றாவது டெஸ்ட் நடைபெறும் ஹோல்கர் மைதானத்தில் அஸ்வின் அற்புதமான சாதனை ஒன்றை தனதாக்கி வைத்துள்ளார். அது என்ன என்பதை இங்கே பார்க்கலாம். 

ஹோல்கர் ஸ்டேடியத்தில் அஸ்வின் அற்புதமான எண்ணிக்கையில் சிறந்த பந்துவீச்சை படைத்துள்ளார். இந்த ஸ்டேடியத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டிகளில், அஸ்வின் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள முகமது ஷமியை விட 11 விக்கெட்கள் அதிகம். 

கடந்த 2016 அக்டோபரில் நியூசிலாந்திற்கு எதிராக ஹோல்கர் மைதானத்தில் முதல்முறையாக களமிறங்கிய அஸ்வின் 13 விக்கெட்களை வீழ்த்தினார்.முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் விட்டுகொடுத்து 8 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 59 ரன்களை விட்டுகொடுத்து 7 விக்கெட்களையும் எடுத்தார். 

அதேபோல், கடந்த நவம்பர் 2019ம் ஆண்டு ஹோல்கர் மைதானத்தில் இரண்டாவது போட்டியில் களமிறங்கிய அஸ்வின், அஸ்வின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே இரண்டு மற்றும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக 18 விக்கெட்களை எடுத்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அஸ்வின் விளையாடிய ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது, பார்டர்-கவாஸ்கர் டிராபி மூன்றாவது போட்டியில் இந்த மைதானத்தில் இந்திய விளையாட இருக்கிறது. 

அஸ்வின் புள்ளிவிவரங்கள்: 

81/6 எதிராக நியூசிலாந்து (முதல் இன்னிங்ஸ்), அக்டோபர் 2016

59/7 vs நியூசிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்), அக்டோபர் 2016

43/2 vs வங்காளதேசம்  (முதல் இன்னிங்ஸ்), நவம்பர் 2019 

42/3 vs வங்காளதேசம் (இரண்டாவது இன்னிங்ஸ்), நவம்பர் 2019

அஸ்வின் - ஜடேஜா:

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி தற்போது உலக கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் முதல் இடத்தை எட்டியுள்ளது. இருவரும் இணைந்து இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 462 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இரண்டு பந்துவீச்சாளர்களும் ஒரு போட்டிக்கு சராசரியாக 10.27 விக்கெட்டுகளைப் எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் மற்றும் மறைந்த ஷேன் வார்னே ஜோடி உள்ளனர்.

எந்தவொரு அணியாக இருந்தாலும் இத்தகைய பந்துவீச்சு சறுக்கலை தரும். இந்த காரணத்திற்காகதான் இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு எதிராக விளையாட கடுமையாக பயிற்சி மேற்கொண்டனர். இந்த இரண்டு பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்கள் மீது தொடர்ந்து அழுத்தத்தை தருவதோடு, முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகின்றனர். 

இந்திய மண்ணில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சு சராசரி:

இந்திய மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சு சாதனையை பார்த்தால் மிகவும் ஆச்சரியத்தை தரும். அஸ்வின் இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20.85 சராசரியுடன் மொத்தம் 326 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், ஒரு இன்னிங்ஸில் மட்டும் 25 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும், ஒரு போட்டியில் 6 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் செய்துள்ளார்.

அதேபோல், ரவீந்திர ஜடேஜா 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19.81 சராசரியில் 189 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவரை, இந்தியாவில் 10 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். மேலும், 2 முறை 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வருகின்ற மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. 

Continues below advertisement