சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத் தடைக்கான தோஷம் போக்கவும் நடத்தப்படுகிறது. 'சுமங்கலி' என்றால் மங்கலம் நிறைந்தவள் என்று பொருள். பல்வேறு நாமங்களைச் சொல்லி வழிபடும் செய்து வருகின்றனர். திருமணமான பெண்களை 'சுமங்கலி' என்று அழைப்பது வழக்கம். பராசக்தி உலகைக் காத்தருள்வதைப் போல, குடும்பத்தைச் சீரும், சிறப்போடும் திறம்பட வழி நடத்தும் பெண்கள் சக்தியின் வடிவமாகவே போற்றப்படுகின்றனர். சுமங்கலிப் பெண்கள் ஒன்று சேர்ந்து, திறம்பட நடத்துவதால் சக்தி வழிபாடாகவே இது போற்றப்படுகிறது.




இந்நிலையில், கலியுகத்தில் மனிதனுக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கவும், கணவன், மனைவி இடையே பரஸ்பரம் ஒற்றுமை அதிகரிக்கவும், வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் பெறுவதற்காகவும் தமிழ் சேவா சங்கம் சார்பில் ஸ்ரீ சத்ய நாராயண சுமங்கலி பூஜை மயிலாடுதுறை நடத்தப்பட்டது. இந்த சங்கத்தின் சார்பாக 2 -ஆம் ஆண்டாக நடத்தப்படும் இந்த பூஜை மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் துர்க்கை அம்மன் சன்னதி முன்பு நடைபெற்றது. 


TNPSC Explanation: குரூப் 2 தேர்வுக்கு இந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு




தென்காசி சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் அறக்கட்டளை ஸ்ரீலஸ்ரீ வாயுசுத்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்கள் கலந்துகொண்டு சத்யநாராயண பூஜையின் பலன்கள் குறித்து பேசி அருளாசி கூறினர். இதில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்டு சத்யநாராயண பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.


CM MK Stalin: ஏற்றமிகு ஏழு திட்டங்கள்.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புதிய திட்டங்கள் என்னென்ன?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண