நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ராஸ் டெய்லரின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் பட்டியலில் 7787 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 4-வது நாள் ஆட்டத்தில் கேன் தனது 26-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். இங்கிலாந்து - நியூஸிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன் எடுத்தார். அப்போது, ராஸ் டெய்லரின் சாதனையை முறியடித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர்கள்:
கேன் வில்லியம்சன் - 7787
ராஸ் டெய்லர் - 7683
ஸ்டீபன் ஃப்ளமிங் - 7172
பிரெண்டென் மெக்கலம் - 6453
மார்டின் க்ரோவ் - 5444
ஜான் ரெயிட் - 5334
டாம் லாத்தம் - 5038
டெஸ்ட் போட்டிகளில் ராஸ் டெய்லர் மொத்தம் 7,683 ரன்களை எடுத்திருக்கிறார். நியூசிலாந்து அணியில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர் என்ற சாதனை பட்டியலிலும் வில்லியம்சனுக்கு முதலிடம்.
இவருக்கு அடுத்த இடத்தில் 19 சதங்களுடன் ராஸ் டெய்லர் உள்ளார்.
கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்
கேன் வில்லியம்சன் 92 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 26 சதங்கள், 33 அரைசதம் எடுத்துள்ளார். 9 முறை 150 ரன்களை கடந்துள்ளார். 32 வயதாகும் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் 53.33 ரன் சராசரி சராசரியாக வைத்துள்ளார்.
கேல் வில்லியம்சன் இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
ராஸ் டெய்லர் வாழ்த்து
அதிக டெஸ்ட் ரன் எடுத்தவர்களில் முதலிடம் பிடித்துள்ள கேன் வில்லியம்சன்னுக்கு வாழ்த்துகள். உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு இந்த சாதனை. டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களின் பங்களிப்பை வெளிப்படுத்துகிறது. மேன்மெலும் சாதனைகள் புரிய வாழ்த்துகள்..
என்று டிவிட்டரில் கேன் வில்லியம்சனுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.