மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கூல்நாயக்கன் எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது ஒச்சான் வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சங்கிலி கருப்பசாமி, சீலக்காரியம்மன் திருக்கோவில். காவல் தெய்வமாகவும், வேண்டியவற்றை நிறைவேற்றும் தெய்வமாக உள்ள இந்த சங்கிலி கருப்பசாமி, சீலக்காரியம்மன் சாமி கோயிலின் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது. சீலக்காரியம்மனுக்கு உக்கிராணம், அர்த்த மண்டபம், மணிமண்டம் மற்றும் சங்கிலி கருப்பசாமிக்கு குதிரை உள்ளிட்டவை கட்டுவதற்காக சுமார் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் இன்று துவங்கியுள்ளது.


- மயூரநாதர் கோயில் கும்பாபிஷேகம் - காவிரி உள்ளிட்ட 9 நதிகளின் புனித நீர் அடங்கிய கடங்கலின் யாகசாலை பிரவேசம்





முன்னதாக நேற்று இரவு அர்ச்சகர்கள் மூலம் யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு கோவிலின் மூலவ தெய்வமாக இருந்த சீலக்காரியம்மனை கட்டுமான பணிக்காக மாற்று இடத்தில் எடுத்து வைத்து சக்தி ஏற்றும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை விழாவில் அத்திபட்டி, தெப்பம்பட்டி, வில்லாணி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஒச்சான் வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட பக்தர்கள் மற்றும் எஸ்.போத்தம்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.




இதுகுறித்து அத்திபட்டியைச் சேர்ந்த தவத்திடம் கேட்ட போது, வேண்டியதை நிறைவேற்றும் சாமியாகவும், காவல் தெய்வமாகவும் உள்ள இந்த சங்கிலி கருப்பசாமி, சீலக்காரியம்மன் மீது கொண்ட பக்தியினால் எஸ்.போத்தம்பட்டியைச் சேர்ந்த 5 பேர் இந்த கோவில் அமைந்துள்ள இடத்தின் அருகே 40 சென்ட் இடத்தை கோயிலுக்காக தானமாக வழங்கியதோடு, கோயிலை விரிவாக்கம் செய்யவும் அதற்கான பங்கையை கிராமத்தின் சார்பில் வழங்குவதாக கேட்டுக் கொண்டனர்.,




மாற்று சமூகமாக இருந்தாலும் நமது குல தெய்வத்திற்கு இடமும் கொடுத்து கோயிலின் விரிவாக்க பணியில் பங்களிப்பதாக கேட்டுக் கொண்ட கிராம மக்களை பாராட்டியதோடு, எங்களது பங்காளிகளையும் ஒருங்கிணைத்து கோயில் பணிகளுக்கான நிதியை திரட்டி கோயில் எழுப்பலாம் என முடிவெடுத்து இந்த பணிகளை துவங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இடம் கொடுத்து எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் எஸ்.போத்தம்பட்டி கிராம மக்களுக்கு மரியாதைகள் செய்து இந்த பூமி பூஜையை சிறப்பாக செய்துள்ளோம் எனவும், எங்களது பங்காளிகளும் தங்களால் முடிந்த தொகையை தற்போதிலிருந்தே வழங்கி வருகின்றனர்., அனைவரின் பங்களிப்போடு விரைவில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.,


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PM Modi Terminator: திரும்ப வருவேன்.. அர்னால்ட் போஸ், டெர்மினேட்டர் ரோபோ ஆன பிரதமர் மோடி..! பாஜக போட்ட அதிரடி டிவீட்


மேலும் செய்திகள் படிக்க - மதுரையில் பட்டப்பகலில் செல்போன் வழிப்பறி; தப்பியோடிய வட மாநில இளைஞரை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள்


- PAK vs NEP Asia Cup 2023: 104 ரன்களுக்குள் துவண்டுபோன நேபாளம்.. அபார பந்துவீச்சு.. வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்..!