ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம்; அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை.

 



நோய்நொடியற்ற வாழ்வையும், அளவற்ற மகிழ்வையும், வளமான ஆண்டாக 2024அமைய வேண்டும் என மீனாட்சியம்மனை பக்தர்கள் மனமுருக வழிபட்டு வருகின்றனர்.


 


 


2024 புத்தாண்டினை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக வரவேற்றனர். இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சின்னஞ்சிறு கிராமங்கள் வரை மக்கள் நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து புத்தாண்டை வரவேற்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தினை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சியும் சென்னை பெருநகர காவல்துறையும் இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளையும், எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு இருந்தது. அதே போல் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை, மதுரை, திருச்சி என முக்கியமான மாவட்டங்களும் பிற மாவட்டங்களிலும் கொண்டாட்டங்கள் அரங்கேறியது. அதே போல் ஆன்மீக ஸ்தலங்களிலும் மக்கள் வெள்ளத்தை காண முடிந்தது. ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம்; அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்தனர்.


- மதுரை அழகர்கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களில் இனி இலவச லட்டு பிரசாதம்.. விவரம்..




உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் தங்கள்  குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை 4.30 மணி முதலே பக்தர்கள் சுவாமி தரிசினத்திற்கு வருகை தருகின்றனர். 2024ம் ஆண்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான, வளமான ஆண்டாக அமைய வேண்டும் என ஒவ்வொருவரும் மீனாட்சியம்மனை தரிசித்தனர். ஆங்கில புத்தாண்டு மற்றும் விடுமுறை நாளான இன்று மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட மக்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர்.




 

மேலும், ஐயப்ப பக்தர்களும், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசை வரிசையாக காத்திருந்து உள்ளே சென்றனர். கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் காவல்துறையினரும் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டுச்சேலை சாத்தி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறனர். தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு பூ அலங்காரத்தை  பக்தர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். நோய்நொடியற்ற வாழ்வையும், அளவற்ற மகிழ்வையும், வளமான ஆண்டாக 2024அமைய வேண்டும் என மீனாட்சியம்மனை பக்தர்கள் மனமுருக வழிபட்டு வருகின்றனர்.


 

மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா