தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்பு 2023-2024 அறிவிப்பு எண் 29-ன் படி திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் 31.12.2023 இன்று முதல் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இலவச பிரசாதம் (இலவச லட்டு பிரசாதம்) வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் படிப்படியாக பல்வேறு கோயில்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு காணொளி காட்சி மூலமாக இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். இதேபோல் திருப்பரங்குன்றம் முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் பிரசாதம் தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம், திருவண்ணாமலை கோவிலிலும் தினமும் பிரசாதம் தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் அழகர்கோவிலை போல் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் சட்டசபையில் அறிவித்தபடி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவில் துணை ஆணையாளர் ரமேஷ் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டுகளை வழங்கினார்.
இது குறித்து மதுரை மேலூர் பகுதி பக்தர்கள் கூறுகையில், “மதுரை நகரம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோவில்களில் ஒவ்வொரு மாதிரியான பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அழகர்கோவிலில் சம்பா தோசை, மீனாட்சியம்மன் கோவிலில் குங்குமம், திருப்பரங்குன்றத்தில் பஞ்சாமிருதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை சார்பாக பல்வேறு கோவில்களிலும் ஒரே மாதிரியாக இலவச லட்டு பிரசாதம் வழங்குவது வரவேற்பை பெற்றுள்ளது. மதுரையில் ஏற்கனவே மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அழகர்கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கி வருவது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !