காளியப்பனூர் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் தாந்தோணி கிராமம் காளியப்பனூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய பணிகள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கும்பாபிஷே விழா ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தம் கொண்டு வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டகம், குதிரை, யானை உள்ளிட்ட நிகழ்ச்சியும் மேல தாளங்கள் முழங்க 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வண்ண சீருடை அணிந்து தீர்த்தம் கொண்டு வந்த பிறகு அதன் தொடர்ச்சியாக மறுநாள் யாகசாலைக்கு முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து முதல் கால யாக வேள்வியும் நடைபெற்றது. பின்னர் இறுதியாக அனைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னால் தொடர்ச்சியாக இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது பின்னர் இன்று யாக சாலைக்கும், யாகசாலையில் வீற்றிருக்கும் புனித தீர்த்தத்திற்கும் சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை காட்டினர்.
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலச குடத்தை தலையில் சுமந்துவாறு கோபுரம் கலச வந்தடைந்தனர். அதன் தொடர்ச்சியாக வேத மந்திரங்கள் கூறியபடி கோபுர கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கோபுர கலசத்திற்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினர். பின்னர் மூலவர் பகவதி அம்மனுக்கும், விநாயகருக்கும் அதைத் தொடர்ந்து பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள பழனியாண்டவர் ஆலயத்திற்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ச்சியாக அழைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் அனைத்து பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் காளியப்பனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழாவை முன்னிட்டு கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆளை வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது சுவாமி தரிசனம் செய்தவுடன் அனைவரும் தங்களால் முடிந்த பொருள் உதவியை வழங்கி சென்றனர். தொடர்ந்து அனைவருக்கும் கடந்த மூன்று நாட்களாக சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், துணைமேயர் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.