சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ராதா கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ராதா கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்பாதியில் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற அருள் மிகு கோதண்டராமர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ ராதா கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.


Sandeshkhali Case: சந்தேஷ்காலி விவகாரம்.. ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்.. கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி!




ராதா கல்யாணத்தை அடுத்து இன்று காலை தென்பாதி விநாயகர் ஆலயத்தில் இருந்து திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து ராதா, கிருஷ்ணன் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற ஆஞ்சநேயர் உற்சவத்தில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றுகூடி  நடனத்துடன்  ராதா கல்யாண விழா கலை கட்டியது.


தாய்மாமன் சீர்.. தலைசுற்ற வைத்த ஊர்வலம்.. மலை கிராம மக்களை வியக்க வைத்த மஞ்சள் நீராட்டு விழா..




அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ராதா கல்யாண உற்சவம் மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது, இதில் சீர்காழி மட்டும் இன்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு செய்தனர்.


EXCLUSIVE : ‘திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவிடம் பேசி வருகின்றன’ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் Open Talk..!