திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை திருவிழா நடந்தது. அதில் லட்சக்கணக்கான பழங்கள் சூறையிடப்பட்டது. வத்தலகுண்டு அடுத்த சேவுகம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த சோலை மலை அழகர் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இக்கோவிலுக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.


Vadakalai Thenkalai Issue : வடகலை - தென்கலை இடையே தொடரும் மோதல்.. பிரபந்தம் பாடுவதில் வந்த தகராறில் கைகலப்பு..




வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேறிய பிறகு அழகருக்கு காணிக்கையாக வாழைப்பழத்தை கூடை, மாட்டுவண்டி, வேன் போன்றவற்றில் கொண்டு வந்து சூறையிடுகிறார்கள். அந்த வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது என்று பொதுமக்கள் அந்த  வாழைப்பழத்தை பொறுக்கி எடுத்து சாப்பிடுகின்றனர். இந்த ஆண்டு லட்சக்கணக்கான பழம் வந்ததாக கோவில் பூசாரி  கூறினார்.


India vs Uzbekistan: வெற்றிக் கணக்கைத் தொடங்குமா இந்தியா; ஆசிய கால்பந்து போட்டியில் உஸ்பெகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை




இதேபோல் பழனியில் மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது. உலகம் முழுவதும் தமிழர்கள் தை திருநாளை வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். அதே போல மாட்டு பொங்கலை முன்னிட்டு நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்த விவசாயிகள், பொங்கல் விழாவில் அதிகாலை மாடுகளை அலங்கரித்து, கொம்புகளுக்கு வர்ணம் பூசியும், மாலை அணிவித்தும் பொங்கல் வைத்து வழிபட்டு மாடுகளுக்கு பொங்கல் வழங்கி கொண்டாடினர்.




பின்னர் விவசாயிகள், ஊர் பொதுமக்கள் சார்பில் மாடுகளை வைத்து பாரம்பரியமாக வண்டி பூட்டி குடும்பத்துடன் வருகை தந்து மேள தாளம் இசைத்தபடி சிறுவர்கள் உற்சாகமாக நடனமாடியபடி பழைய ஆயக்குடி காளியம்மன் கோவில் முன்பு துவங்கி சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஊர்வலமாக சென்று மீண்டும் துவங்கிய இடத்திலேயே மாட்டு வண்டி ஊர்வலம் நிறைவடைந்தது.