Vadakalai Thenkalai Issue : வடகலை - தென்கலை இடையே தொடரும் மோதல்.. நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் கைகலப்பு..

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை ,தென்கலை பிரிவினர் இடையே  அடிதடி சண்டை நடந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Continues below advertisement

பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை தென்கலை பிரிவினர் இடையே அடிதடி மோதல் ஏற்படுவது பக்தர்களிடையே முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

அடிதடி மோதல்: 

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள்  வாலாஜாபாத், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

பழைய சீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாலை வெயில் வரதராஜ பெருமாள் மீது படும்படி மலையில் இருந்து ஒய்யாரமாக இறக்கப்பட்டார்.

மலையிலிருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்ல இரண்டு பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்து காட்சி அளித்தனர்.

இந்தநிலையில் நேற்று  பழையசிவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தின் போது பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் திடீரென கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டனர் அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் இதனைக் கண்டு அவதிப்பட்டனர்.

மேலும் வடகலை, தென்கலை பிரிவினருடைய பிரபந்தம் பாடுவது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை ,தென்கலை பிரிவினர் இடையே  அடிதடி சண்டை நடந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Continues below advertisement