India Vs Uzbekistan ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் ஆசிய கால்பந்து போட்டி கத்தாரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 24 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. மொத்தம் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணி ’குரூப் பி’ வில் இடம் பெற்றுள்ளது. இந்த குரூபில் இந்தியா, சிரியா, ஆஸ்திரேலியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி இதுவரை ஒரேயொரு லீக் போட்டியில் விளையாடி தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 0 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது. 


இந்நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டில் இன்று அதாவது ஜனவரி 18ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. உஸ்பெகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் சிரியா அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 






இந்திய அணி உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வென்று புள்ளிக்கணக்கை துவங்கும் நோக்கில் இந்திய அணி தயாராகி வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக சிரியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தியா போட்டிக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு ஐக்கிய அமீரகத்திற்கும் பாலஸ்தீனுக்கும் இடையில் போட்டி நடைபெறவுள்ளது. 






ஏற்கனவே ஆசிய கால்பந்து கோப்பையை நடத்தும் கத்தார் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆசிய கோப்பை 2023 போட்டி ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜியோ சினிமா செயலி மற்றும் இணையதளத்திலும் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதால் ரசிகர்கள் மேற்குறிப்பிட்ட தளத்திலும் சேனலிலும் போட்டியைக் காணலாம்.