தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி கோவிலை மலர்களால், பழங்களாலான தோரணங்கங்களாலும் அலங்கரிக்கபட்டு, சிறப்பு பூஜைகள நடைபெற்ற பின்  நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


Rudhran Movie Review: அம்மா சென்டிமென்டா? ஆக்ஷன் தாண்டவமா? : ராகவா லாரன்ஸின் "ருத்ரன் " பட விமர்சனம் இதோ...!




தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுபகிருது ஆண்டு நிறைவடைந்து, சித்திரை முதல் நாளான நேற்று சோபகிருது ஆண்டு துவங்கியது. இதனையடுத்து தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ்புத்தாண்டை கொண்டாடினர்.


KKR vs SRH IPL 2023: கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்.. முதலிடத்திற்கு பாயுமா ராணாவின் படை?




அதிகாலையில் கனிவகைகள், கண்ணாடி ஆகியவை வைத்து வழிபாடு நடத்தி, புத்தாடை அணிந்து தமிழ்புத்தாண்டை வழிபாடு நடத்தி வரவேற்றனர். இந்நிலையில் பழனி மலைக்கோவிலில்‌ அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை பழனி கோவில் திறக்கப்பட்டு கோவிலைச் சுற்றி மலர் அலங்காரத்துடனும் பழங்களால் ஆன தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகளுடன் செய்யப்பட்டு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கபட்டனர்.


DMK Files Annamalai LIVE: ரபேல் வாட்சை ரூ.3 லட்சத்துக்கு வாங்கினேன் - அண்ணாமலை




மலைக்கோவில் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையம், ஆகியவற்றில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், மலைக்கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் சிறப்பு கட்டண பூஜை வரிசைகளிலும் காத்திருந்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகிறனர்.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண