விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் சித்திரை 1 ஆம் தேதி நடக்கும் லட்ச தீப திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.


விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது சாந்த சொருப ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு 31 ஆம் ஆண்டு இலட்ச தீப விழா நடந்தது. இதனையொட்டி காலை 7 மணி முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். இதனை தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சந்தனக்காப்பு, வடை மாலை அணிவித்தல், துளசி மாலை அணிவித்து கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடந்தது. இதன் முக்கிய நிகழ்சியாக மாலை 6 மணிக்கு தீபம் எற்றும் நிகழ்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றினர். இதனை தொடர்ந்து வாண வேடிக்கையுடன் மேடை நிகழ்சிகளும் நடந்தது. இதில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொது மக்கள் கலந்துகொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் செய்து இருந்தனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண