ஆங்கில வருடபிறப்பை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். மூன்று மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


PM Modi Visit TN: பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை.. ரூ. 19,850 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்.. முழு விவரம் இதோ..




அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.


PSLV C58: கருந்துளைகளை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.. விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்வி சி58 ராக்கெட்..




ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் பக்தர்களுக்கு அனுமதிக்கபட்டனர். ஆங்கில வருட பிறப்பு மற்றும் பள்ளி விடுமுறை, மற்றும் மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் வருகை என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்ததால் மின் இழுவை ரயில், ரோப்கார் நிலையம் மலைக்கோவில் மூன்று மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


New Year Wishes 2024: வந்துவிட்டது புது ஆண்டு.. நண்பர்கள், உறவினர்களுக்கு உடனே இப்படி ஒரு வாழ்த்தை தட்டிவிடுங்க..




New Year 2024: தங்க கவசத்தில் எழுந்தருளிய கற்பக விநாயகர்; பிள்ளைாயார்பட்டியில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு


குடமுழுக்கு நினைவரங்கம்  வழியாக மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கவும் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் ஊர் காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டமும் பழனி பாதையாத்திரையாக வரும் முருக பக்தர்களின் கூட்டமும் அதிகரித்துள்ளது. இன்று புது வருட பிறப்பில் பழனி மலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகரித்தே காணப்பட்டது.