பிள்ளைாயார்பட்டியில் 2024 ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு. தங்க கவசத்தில் எழுந்தருளிய அருள்மிகு கற்பக விநாயகர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் 1300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


2024 புத்தாண்டு வரவேற்பு


புத்தாண்டினை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக வரவேற்றனர். இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சின்னஞ்சிறு கிராமங்கள் வரை மக்கள் நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து புத்தாண்டை வரவேற்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தினை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சியும் சென்னை பெருநகர காவல்துறையும் இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளையும், எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு இருந்தது. அதே போல் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை, மதுரை, திருச்சி என முக்கியமான மாவட்டங்களும் பிற மாவட்டங்களிலும் கொண்டாட்டங்கள் அரங்கேறியது. அதே போல் ஆன்மீக ஸ்தலங்களிலும் மக்கள் வெள்ளத்தை காண முடிந்தது. 




சிவகங்கை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்கள், பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை சிறப்பு பூஜையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மக்கள் நீண்ட வரிசையில் நின்று 2024ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்ற விருப்பத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.




பிள்ளைாயார்பட்டி ஹீரோ கணேஷ்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயர் ஆலயத்தில் 2024 ம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு 4:30 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.




ஆண்டின் முதல் நாளில் இந்துக்களின் முழுமுதற்கடவுளாக போற்றப்பகின்ற விநாயக பெருமானை தரிசனம் செய்தால் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அருள்மிகு கற்பக விநாயகர் தரிசிக்க தமிழகம் முழுவதும் மட்டுமன்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று பெண்கள், குழந்தைகள், ஐயப்பன்மற்றும் முருக பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு அதிகாலையில் இருந்தே பல்லாயிர கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வர துவங்கியுள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!


மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!