விழுப்புரம்: உலகிலேயே மிக உயரமான 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் உலக நன்மை வேண்டி 1008 மஞ்சள்குடம் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ மகா பாதாள பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் உலக நன்மை வேண்டி ஆடி மாத நான்காம் வெள்ளி முன்னிட்டு 24 ஆம் ஆண்டு 1008 மஞ்சள்குடம் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மொரட்டாண்டி அய்யனார் கோவில் எல்லை பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் நீல நிற உடை அணிந்து மஞ்சள் குடம் சுமந்து வந்து பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோவிலுக்கு வருபவர்களுக்கு திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை, கடன் தொல்லை, பில்லி சூனியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம் என கூறப்படுகிறது


பிரத்யங்கிரா தேவி  தலபெருமை:


அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மஹர் பிரத்யங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆயிரம் சிங்கங்கள். இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள், இவள் தரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவன் இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு இவளே யந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள். இவளது மந்திரத்தை 'அங்கிரஸ' பிரத்திரயங்கிரஸ்' என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே 'பிரத்யங்கிரா என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்யங்கிரா தேவிக்கு புதுச்சேரி அருகில் 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் கூடிய கோயில் அமைந்துள்ளது.


இங்குள்ள பிரயை விநாய்களுக்கு 1008 தினங்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கணபதி ஹோமம் நடந்துள்ளது அத்துடன் 10018 தேன் கலச அபிஷேகம். ஒரே இடத்தில் 108 விநாயகர் சிலைகளுக்கு நடத்தப்பட்டது விநாயகரின் கருவறை விமானம், கஜபிருஷ்ட விமானம் ஆகும். அதே போல் பாதாள காளிக்கு உரிய கருவறை விமானம் 'கொ மேரு வடிவில் அமைக்கப்பட்டிருப்பது எங்குமில்லாத சிறப்பம்சமாகும் மொரட்டாண்டி சித்தர் என்றழைக்கப்படும் நொல்லைக்காது சாமிகள் வாழ்ந்த தலம் இது.


பூஜைகள்:


செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராரு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள் தேய்பிறை அஷ்டமி யாகம், நடுதிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு விருப்பமானவை இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும (கண்களுக்கு புலப்படாத) ரூபத்தில் உலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம். இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள். நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம். அத்துடன் இந்த யாகத்தில் பற்பல மூலிகைகள் அளிப்பதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் நம் உடலில் பாய்வதால், மனத்தெளிவு நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல் விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்குவதாக புராணங்கள் வேதங்கள் சாஸ்திரங்கள் கூறுகிறது.


தல வரலாறு 


ராமரையும், லட்சுமணனையும் தன் படைபலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் ராவணனின் மகன் இந்திரஜித். எனவே நிரும்பவை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக மஹா பிரத்யங்கிரா யாகம் நடத்தி, ராம லட்சுமண சகோதரர்களை அழித்து விடலாம் என நினைத்தான். இந்த விஷயத்தை இந்திரஜித்தின் சித்தப்பா விபீஷ்ணனின் உதவியால் ஆஞ்சநேயர் அறிந்தார். இந்திரஜித் இந்த யாகத்தை பூர்த்தி செய்து விட்டால். அவனை வெல்ல யாராலும் முடியாது என அறிவித்து முதலில் யாகத்தையும், பின் இந்திரஜித்தையும் அழித்தார். இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்யங்கிரா தேவிக்கு தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது.