Gaming Addiction: வீடியோ கேம்களில் மூழ்கிக் கிடப்பது குழந்தைகளுக்கு. பல்வேறு உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தலாம்.


கேம்களில் மூழ்கும் குழந்தைகள்:


வீடியோ கேம்கள் இளைய தலைமுறையினரை தங்கள் பக்கம் கவர்ந்து இழுத்து வருகின்றன. எனவே, அவற்றிற்கு அடிமையாவதற்கான அறிகுறிகளையும், குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் அதன் தாக்கத்தையும் பெற்றோர்கள் அடையாளம் கண்டுகொள்வது மிகவும் முக்கியமானதாகி உள்ளது.  உடல், மன மற்றும் சமூக ஆரோக்கியத்தில் அதிகப்படியான ஸ்க்ரீனிங் டைம் பரந்த தாக்கங்களை ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு, ஆரோக்கிய பாதுகாப்புக்கு ஒரு முழுமையான அணுகுமுறை அவசியம். கேமிங் போதைக்கு முன்கூட்டியே தீர்வு காண்பது, உங்கள் குழந்தைக்கு சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த உதவும்.


குழந்தைகள் கேமிங்கில் மூழ்குவதை தடுக்க 3 வழிகள்:


1)   ஸ்க்ரீனிங் நேரத்தை கண்காணித்தல் & வரம்புக்குட்படுத்துதல்:



  • தெளிவான விதிகளை அமைக்கவும்: வீடியோ கேம்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே விளையாட வேண்டும் என, குழந்தைகளுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும்

  • பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தவும்: ஒவ்வொரு கேமிங் சாதனங்களும் தற்போது உள்ளமைக்கப்பட்ட பெற்றோர் கட்டுப்பாடுகளை(Parental Controlling) கொண்டுள்ளது. இதன் மூலம் பயன்பாட்டிற்கான நேர வரம்புகளை அமைக்கவும், பயன்பாட்டைக் கண்காணிக்கவும் முடிவும்.

  • அட்டவணையை உருவாக்கவும்: தினசரி அட்டவணையை உருவாக்கவும், அதில் பல்வேறு செயல்பாடுகளுக்கு என ஒதுக்கப்பட்ட நேர விவரங்கள் இடம்பெற வேண்டும். இது குழந்தைகளுக்கு ஒரு சீரான வழக்கத்தை உறுதி செய்கிறது.

  • இடைவேளை அவசியம்: வீடியோ கேம்களால் ஏற்படும் கண் அழுத்தத்தைக் குறைக்க 20-20-20 விதியை பயன்படுத்துங்கள். அதன்படி,  ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20-வினாடி பிரேக் எடுத்து 20 அடி தூரத்தில் உள்ள ஒன்றைப் உற்று பார்க்க வேண்டும்.

  • தொழில்நுட்பம் இல்லாத நேரம்: சாப்பாட்டு அறை மற்றும் படுக்கையறைகள் போன்ற வீட்டின் சில பகுதிகளை தொழில்நுட்பம் இல்லாத மண்டலங்களாக நியமியுங்கள். போர்ட் கேம்கள், கார்ட் அல்லது வாசிப்பு போன்ற பிற செயல்பாடுகளில் ஈடுபட ஊக்கப்படுத்துங்கள்


2. மாற்று செயல்பாடுகளை ஊக்குவியுங்கள்:



  • ஆர்வத்தின் மீது கவனம் செலுத்துங்கள்:  புதிய பொழுதுபோக்குகள் மற்றும் செயல்பாடுகளை ஆராய்வதில் உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுங்கள். முடிந்தால் ஒன்றாக வர்க்‌ஷாப் அல்லது வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள்.

  • உதாரணமாக செயல்படுங்கள்: ஸ்க்ரீன் அல்லாத செயல்களில் நீங்களே ஈடுபடுவதன் மூலம் ஒரு முன்மாதிரியாக இருங்கள். குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரின் நடத்தையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  • ஏக்டிவிட்டி லிஸ்ட்:  உங்கள் குழந்தை தேர்வு செய்யக்கூடிய வேடிக்கையான, ஸ்க்ரீனிங் அல்லாத செயல்பாடுகளின் பட்டியலை உருவாக்குங்கள். போர்ட் விளையாட்டுகள், கைவினைப்பொருட்கள், வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் வாசிப்பு போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.

  • பரிசு அளியுங்கள்: குழந்தைகள் ஸ்க்ரீனிங் அல்லாத செயல்களில் ஈடுபடுவதால் புள்ளிகள் அல்லது வெகுமதிகளைப் பெறும் ஒரு வெகுமதி முறையைச் செயல்படுத்தவும். இது அவர்களை மேலும் ஊக்குவிக்கும்.
    பிளே-டேட்களை ஒழுங்கமைக்கவும்: வீடியோ கேமிங்கில் கவனம் செலுத்தாத நண்பர்களுடன் பிளே-டேட்களை ஏற்பாடு செய்யுங்கள். வெளிப்புற விளையாட்டுகள், விளையாட்டுகள் அல்லது பிற குழு நடவடிக்கைகளை ஊக்குவியுங்கள்


3. தொழில்முறை ஆலோசனைகள்:



  • குழந்தை மருத்துவரை அணுகவும்:  கேமிங் அடிமையாவதற்கான அறிகுறிகளை நீங்கள் கண்டால், உங்கள் கவலைகளைப் பற்றி விவாதிக்க மற்றும் பரிந்துரைகளைப் குழந்தைகளுக்கான மருத்துவரை அணுகுங்கள்

  • சிகிச்சையாளரைக் கண்டுபிடியுங்கள்: கேமிங் போதை அல்லது குழந்தை உளவியல் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற மருத்துவருடன் விவாதியுங்கள். அவர்களால் குழந்தை மற்றும் குடும்பத்திற்கு உத்திகள் மற்றும் ஆதரவை வழங்க முடியும்.

  • வழக்கமான சோதனைகள்:  அதிகப்படியான திரை நேரத்தால் ஏற்படும் கண் சிரமம் அல்லது பார்வைப் பிரச்சனைகளைக் கண்காணித்து நிர்வகிக்க ஒரு கண் மருத்துவரிடம் வழக்கமான கண் பரிசோதனைகளை திட்டமிடுங்கள்.

  • ஆதரவு குழுக்களில் சேரவும்:  வீடியோ கேம்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெற்றோருக்கான ஆதரவு குழுக்களில் சேருங்கள். அங்கே பகிரப்படும் அனுபவங்களும்,  உத்திகளும் மிகவும் உதவியாக இருக்கும்.

  • கல்வி வளங்கள்: திரை நேரத்தை நிர்வகித்தல் மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் புத்தகங்கள், ஆன்லைன் படிப்புகள் மற்றும் வர்க்-ஷாப்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


வீடியோ கேம்களால் வரக்கூடிய பாதிப்புகள்:


நீண்ட நேரம் வீடியோ கேம்களை விளையாடுவது,  நாள்பட்ட கண் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால்,  மங்கலான பார்வை, உலர் கண்கள் மற்றும் தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிகப்படியான கேமிங் தூக்க முறைகளை சீர்குலைத்து, சோர்வு மற்றும் கல்வி செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கும். உடல் செயல்பாடு இல்லாதது உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். மனச்சோர்வு, பதற்றம் மற்றும் சமூக தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் அபாயங்களுடன் உளவியல் தாக்கம் ஆழமானதாக இருக்கும். இந்த அபாயங்களைக் குறைப்பதற்கும் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியமாகும்.


[துறப்பு:  பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் வெளிப்படுத்திய கருத்துகள், நம்பிக்கைகள் மற்றும் பார்வைகளின் தொகுப்பே மேலே விவரிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டு இருப்பவை ABP நாடுவின் கருத்துகள், நம்பிக்கைகளை பிரதிபலிக்கவில்லை.]