சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆடி மாத பிறப்பை ஒட்டி நடைபெற்ற சிறப்பு கோ பூஜை வழிபாடில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஆடி திருவிழாக்கள்
கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த இரண்டு நாட்களாக திருவிழாக்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஆதித்யநாத்தின் ஓவர் கான்ஃபிடண்ட்: உ.பி பின்னடைவுக்கு 6 முக்கிய காரணங்களை கண்டறிந்த பாஜக!
பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.
WhatsApp: உங்கள் ஃபேவரைட் நபர்கள் யார்? லிஸ்ட்டை ரெடி பண்ணுங்க! வந்தது வாட்ஸ் அப் அப்டேட்
கோயிலின் சிறப்புகள்
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.
Bank Of Baroda: வாடிக்கையாளர்களே! புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பாங்க் ஆஃப் பரோடா!
தமிழ் மாத பிறப்பு வழிபாடு
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறப்பன்று சிறப்பு கோ பூஜை நடைபெறும். அந்த வகையில் தமிழ் மாதமான ஆடி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோபூஜை, வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோசாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசுமாடு கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து வஸ்திரம் சாத்தி தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பசு மாடு மற்றும் கன்றினை வலம் வந்து மலர் தூவி வழிபாடு செய்தனர்.
Watch Video: சேட்டை! அந்தரத்தில் தொங்கி அட்ராசிட்டி செய்த சுட்டிக்குழந்தை - நீங்களே பாருங்க
63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு
இதே போல் பிரம்மபுரீஸ்வரர்ஸ்வாமி சன்னதி பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேவாரப் பதிகங்கள் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.