ஆடி மாதம் முதல் வெள்ளி அம்மனுக்கு பச்சை மஞ்சள் பூசி அபிஷேகம் செய்து, அம்மனை குளிர்வித்தால் விவசாயம் செழித்து, அனைத்து மக்களும் சுவிசமாக வாழ்வார்கள் என்பது இப்பகுதி பெண் பக்தர்களின் நம்பிக்கை
Aadi Month: தமிழ் மாதங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் (Aadi Month) உள்ளது. ஆன்மீகத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதம் இந்தாண்டு கடந்த புதன்கிழமை பிறந்தது. ஆடி மாதம் பிறந்து விட்டாலே கோயில்களில் விழாக்கோலம் காணப்படும். குறிப்பாக, அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுதல், அக்கினிச் சட்டி எடுத்தல், சிறப்பு வழிபாடு என களைகட்டும். இந்நிலையில் சிவகங்கையில் இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு அம்மியில் மஞ்சள் அரைத்தனர். இந்த காட்சிகள் பலரையும் பரவச நிலையை அடையச் செய்தது.
- Aadi Month 2024: மக்களே.. ஆடி மாதம் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..?
மஞ்சள் அபிஷேகம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும். அம்மனுக்கு பச்சை மஞ்சள் பூசி, அபிஷேகம் செய்து, அம்மனை குளிர்வித்தால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் அனைத்து மக்களும் சுவிசமாக வாழ்வார்கள், என்பது இப்பகுதி பெண் பக்தர்களின் வேண்டுதலாக இருக்கிறது. இந்நிலையில் ஆடி வெள்ளி முதல் நாளான இன்று மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் 51 அம்மிக்கல் வைக்கப்பட்டு, அதில் பெண் பக்தைகள் 301 கிலோ பச்சை மஞ்சளை அரைத்து வருகின்றனர். பெண் பக்தைகளால் அரைக்கப்படும் இந்த மஞ்சள் அம்மனுக்கு பூசி அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த அபிஷேகம் செய்வதால் அம்மன் குளிர்ச்சி அடைவார் என நம்மிடம் தெரிவிக்கின்றனர்.
மனம் குளிர்ந்து மக்களுக்கு நன்மை
மேலும் பெண் பக்தர்கள் நம்மிடம் கூறுகையில்....,” காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு வேண்டுதல் நிறைவேறும். கஷ்ட, நஷடங்களை தீர்த்து. மண்டைக்கு பத்து போடாத அளவிற்கு உடல் நலத்தையும் கொடுப்பாள். அம்மனுக்கு பிடித்த ஆடி வெள்ளியில் மஞ்சள் அரைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்வோம். இதனால் அம்மன் மனம் குளிர்ந்து மக்களுக்கு நன்மை செய்வார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin: காவிரி விவகாரம் - தொடங்கியது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேர் பணியிட மாற்றம்; 9 இணை இயக்குநர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து அதிரடி