குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோயிலில் காளி அரவன் அசுரனை வதம் செய்யும் காளி ஆட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு படையல் இட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.


ராஜகாளியம்மன் கோயில் ஆண்டு திருவிழா 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோயில். திரு துருத்தி என்னும் குத்தாலம் சேத்திரத்திற்கு தென்கிழக்கு திசையில் திருக்கோயில் கொண்டு அருள் பாலிக்கும், இந்த கோயிலில் 20-ம் ஆண்டு திரு நடன உற்சவ திருவிழா கடந்த 10-ம் தேதி இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.


ABP கோயில் உலா: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஆடி மாத பிறப்பு சிறப்பு வழிபாடு




காளி வீதியுலா 


அதனை தொடர்ந்து முதல் நாள் நிகழ்வான திரு நடன உற்சவ நிகழ்வு இரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தியுடன் விரதமிருந்த பக்தர்களில் ஒருவர் ராஜகாளியம்மன் வேடமணிந்து கோயிலை சுற்றி வலம் வந்து சிறப்பு நடனமாடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 


ABP கோயில் உலா: வைத்தீஸ்வரன் கோயிலில் பாரம்பரிய திருவிழா! முளைப்பாரி எடுத்து பக்தர்கள் வழிபாடு சீர்காழி அருகே ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி




30 அடியில் பிரமாண்ட அசுரன் பொம்மை 


கோயிலின் அருகே 30 அடி நீளத்தில் பிரம்மாண்ட அரவன் அசுரன் மண் பொம்மை அமைக்கப்பட்டு, காளி திரு நடனம் புரிந்தவாறு கையில் சூலம் ஏந்தி வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து அரவன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து, இல்லங்கள் தோறும் பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏந்தி அம்மனுக்கு பாத பூஜை, அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.


குத்தாலம் அருகே கோயில் குளத்தில் தலை, கை, கால்கள் இன்றி கிடைத்த சிலை - ஐம்பொன் சிலையா? என ஆய்வு




மூன்றாம் தேதி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம்


இந்த திருநடன உற்சவம் ஆனது தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவீதி உலா நடைபெற்று கோயிலை வந்தடையும். அதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் உற்சவமான மூன்றாம் தேதி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டு காளி வதம் செய்யும் நிகழ்வையும், திரு நடன காட்சியையும் கண்டு ரசித்து வழிபட்டு சென்றனர்.


Stock Market Today: புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி: 80, 000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்..!