Watch Video : மெக்சிகோவில் வானில் பறந்து கொண்டிருந்த ஹாட் ஏர் பலூனில் திடீரென தீ பற்றி எரிந்ததால் அதில் இருந்த பயணிகள் விபரீத முடிவு எடுத்துள்ளனர்.
பற்றி எரிந்த ஏர் பலூன்:
உலககெங்கிலும் ஹாட் ஏர் பலூனில் பயணம் செய்வது என்பது ஒரு பொழுதுபோக்காக மாறியுள்ளது. இதில் பயணம் செய்ய ஒவ்வொருவரும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் இதில் உரிய பாதுகாப்பு இல்லையென்றால் சில அசபாவித சம்பவங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தவகையில் தற்போது மெக்சிகோவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மெக்சிகோ நகரத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தியோதிஹுவாகனில் பயண ஏர்பாட்டாளர்கள் ஹாட் ஏர் பலூன் சேவைகளை வழங்குகிறார்கள். தியோதிஹுவாகன் தொல்பொருள் தளத்தில் ஹாட் ஏர் பலூன் பறந்து கொண்டிருந்தது. அந்த ஏர் பலூனில் 2 பேர் பயணித்து கொண்டிருந்தனர். இந்நிலையில், ஏர் பலூன் மேலே கிளம்பியபோது, சிறிது நேரத்திலேயே தீ பிடிக்கத் தொடங்கியது. இதனால் அதில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டமாக இருந்தனர்.
உயிரிழப்பு:
ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் பதற்றத்தில் இருந்த இரு பயணிகள் கிழே குதிக்க முடிவு செய்தனர். பின்னர், ஏர் பலூனில் தீ முழுமையாக பரவ தொடங்கியதால் உடனே இரு பயணிகளும் கீழே குதித்தனர். இதனால் பயணிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தது 39 வயது பெண் மற்றும் 50 வயது ஆண் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், அதில் இருந்த இளைஞரும் கீழே குதித்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், நடுவானில் திடீரென தீப்பிடித்த ஹாட் ஏர் பலூன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அடுத்து, ஹாட் ஏர் பலூனில் திடீரென தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க
இந்தூர் கோயில் விபத்து: மீட்புப் பணியின்போது நிகழ்ந்த சோகம்; அதிர்ச்சி வீடியோ
கல்வி சான்றிதழ் விவகாரம்.. பிரதமர் மோடியை கலாய்த்து சுப்பிரமணியம் சுவாமி ட்வீட்..!